Tumbbad Tamil Review- Hindi Horror Movie
படத்தின் கதை மற்றும் சொல்ல வரும் கருத்து பேராசை. போராசை கடவுள் , மனுசன் என யாரையும் விட்டு வைக்காது . அதில் சிக்கி சீரழிஞ்ச கடவுள் மற்றும் அந்த கடவுளை வணங்கும் ஒரு குடும்பம் 3 தலைமுறைகளாக படும் பாடு தான் இந்த படம்.
IMDb 8.2
Tamil dub ✅
Available @Primeindia
உலகத்தை படைத்த ஒரு பெண் கடவுள். அவருடைய மூத்த மகன் பேராசையால் அந்த பெண் கடவுளின் வயிற்றில் சிறை வைக்கப்படுகிறான்.
ஆனால் அந்த பேராசை கடவுளுக்கு கோயில் கட்ட முயற்சி செய்யும் குடும்பத்தில் ஒருவன் அந்த கடவுளை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான்.
ஆனால் ஒரு அளவோட நிறுத்தாமல் பேராசை பிடுத்து தன் மகனோடு சேர்ந்து அடுத்த லெவலுக்கு போக நினைக்க அதனால் ஏற்படும் பின்விளைவுகள் தான் படம்.
படத்தோட ஆரம்பத்தில் பாட்டியை வச்சு வரும் ஹாரர் செமயா இருந்தது.
அந்த முதல் ஹாரர் போர்ஷன் முடிஞ்ச பிறகு கொஞ்சம் ஸ்லோவான மாதிரி தெரிஞ்சது. ஆனால் மறுபடியும் பிக்கப் ஆகிடுச்சு.
படத்தோட முக்கிய அம்சம் லொக்கேஷன்கள்.. அதுவும் மழையை ஹாரர்க்கு நல்லா யூஸ் பண்ணி இருக்காங்க. பிண்ணனி இசை கலக்கல்.
முன்னாடியே பார்த்து இருக்க வேண்டிய படம்.
நல்ல ஹாரர் + மெஸேஜ் சொல்ற படம். கண்டிப்பாக பாக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக