முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Train To Busan - 2016

Train To Busan - 2016 Korean Movie Review In Tamil 


ரொம்பவே பிரபலமான கொரியன் ஜாம்பி படம் இது. இந்த படத்தை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள். 

IMDb 7.6
Language: Korean 
Tamil dub ✅
Available @Primevideo

ஆனாலும் ஜாம்பி படம் என்பதால் சில பேர் தவிர்த்து இருக்கக்கூடும். அவர்களையும் பார்க்க வைக்க தான் இந்த போஸ்ட் 😉😉

Train to Busan Tamil dubbed movie review, Korean movies in tamil, Hollywood movies review in tamil, watch tamil dubbed movies online free , zombie tamஇந்த படத்தின் கதையை பார்க்கலாம். ஒரு அதிவேகமாக பயணிக்கும் ரயிலுக்குள் பெரும்பாலானவர்கள் ஜாம்பியாக மாறினால் என்ன ஆகும். ஜாம்பியாக மாறாதவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொண்டனர் என்பதை சொல்லும் படம். 

நிறைய பேர் படத்தில் இருந்தாலும் குறிப்பிட்ட சிலரை மையமாக வைத்து படம் நகரும். 
 முன்னாள் மனைவியை பார்க்க மகளுடன் செல்லும் தந்தை, கர்ப்பிணி மனைவியுடன் பயணிக்கும் கணவன், ஆதரவற்ற மனிதர், ஒரு வயதான சுயநலம் படைத்த ஒருவர் , ஒரு பேஸ் பால் டீம் மற்றும் வயதான சகோதரிகள். 

இவர்கள் அனைவரும் Busan செல்லும் அதிவேக ரயிலில் பயணம் செய்கிறார்கள். அப்போது ரயில் மற்றும் கொரியா முழுவதும் ஜாம்பி தாக்குதல் நடக்கிறது. இதில் யார் எல்லாம் தப்பித்து மனிதனாக உயிருடன் Busan போய் சேர்ந்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள். 

ஜாம்பி படம் என்பதால் ஒரே குத்து வெட்டு ரத்தம் மட்டும் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். படத்தில் சென்டிமென்ட், குடும்பத்திற்காக செய்யும் தியாகம் என கலக்கலாக படம் நகரும். 

அதுவும் மனிதத் தன்மையை இழந்தவர்களுக்கு அந்த பாட்டி கொடுக்கும் தண்டனை 👌. 
சுயநலம்மிக்க அப்பாவாக (Squid Game ல விளையாட ஆள் பிடிப்பாருல அவரு தான்)  வந்து  கொஞ்சம் கொஞ்சமாக மனசு மாறி செய்யும் தியாகம் என கண்கலங்க வைக்கும் நிறைய காட்சிகள் உண்டு. 

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொருவர் Don Lee . கையில் கிடைத்ததை கவசமாக கையில் கட்டிக்கொண்டு ஜாம்பிகளை டீல் செய்யும் விதம் 🔥🔥🔥🔥

சும்மா எப்பவுமே மண்ணு மாதிரி சுத்திக்கிட்டு இருந்த ஜாம்பிகளை வெறி கொண்டு ஓட வைத்த பெருமை இந்த படத்தையே சாரும்.

ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே ட்ராக்குகளில் நடக்கும் சேஸிங் தரமா எடுத்து இருப்பார்கள்.

ஹாலிவுட் படம் மாதிரி நினைத்து பார்க்காதீர்கள். இது கொரியன் படம் என்பதால் நீஙக நினைக்கும் முடிவு கிடைக்காது.

இந்த படத்திற்கு கிடைத்த பெயரை வைத்து‌ வநத இதன் ரெண்டாவது பாகம் Train To Busan: The Peninsula வந்து ஊத்திக்கிச்சு. 

ஆனால் இந்த படம் ஜாம்பி படங்களில் ஒரு மைல்கல் . 

சில வன்முறை மற்றும் ரத்தக்காட்சிகளை பொறுத்துக் கொண்டால் குடும்பத்துடன் பார்க்கலாம்.

தரமான படம். இது வரை பாக்கலனா கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥🔥🔥

Trailer: 
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

Suzhal - The Vortex - 2022

Suzhal - The Vortex - Tamil Series Review  விக்ரம் வேதா பட புகழ் புஷ்கர் - காயத்ரி உருவாக்கத்தில் கதிர் , ஐஸ்வர்யா ராஜேஸ்,ஸ்ரியா ரெட்டி மற்றும் பார்த்திபன் நடிபபில் Amazon Prime -ல் வெளிவந்துள்ள Crime Investigation Thriller .  IMDb 8.7 Tamil ✅ 1 Season , 8 Episode OTT Amazon Prime அழகான மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு சின்ன ஊர் சாம்பலூர். இந்த ஊரின் வாழ்வாதாரம் அங்கு உள்ள சிமெண்ட் தொழிற்சாலை.  அந்த தொழிற்சாலையின் யூனியன் லீடர் சண்முகம் ( பார்த்திபன்) அவரின் மூத்த மகள் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) . ஊரின் இன்ஸ்பெக்டர் ரெஜினா  (ஸ்ரியா) மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரை (கதிர்) .  ஊரில் ரொம்ப பிரபல திருவிழாவான 9 நாட்கள் நடைபெறும் மயான‌ கொள்ளை திருவிழாவை கொண்டாட ஊர்மக்கள் ரெடியாகிறார்கள்.  திருவிழாவின் முதல் நாள் அன்று இரவு இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன. சிமெண்ட் ஆலை தீப்பற்றி எரிகிறது மற்றும் அதே நாளில் சண்முகத்தின் இளைய மகள் நிலா காணமல் போகிறார்.  இரண்டு கேஸ் களையும் விசாரிக்க ஆரம்பிக்கும் ரெஜினா மற்றும் சக்கரை யார் குற்றவாளி என்பதை கண்டுபிடித்தார்களா என்பதை தரமான பல ட்விஸ்ட்களுடன் சொல்கிறது தொடர்.