Over The Hedge - 2006 [Animation] - Review In Tamil
ஒரு ரக்கூன் கரடிகிட்ட இருந்து சாப்பாட திருடி மாட்டிக்கிடுது. ஒரு வாரத்துல திரும்ப கொடுக்கலனா கொன்னுடுவேனு மிரட்டுது கரடி.
IMDb 6.9
Tamil dub (May be , Not Sure )
Watch With Kids &Family ✅✅
![]() |
Over The Hedge - 2006 [Animation] |
கரடிக்கு சாப்பாட்டை திரும்ப கொடுக்க திருட ஃப்ளான் பண்ணி ஒரு அப்பாவியான விலங்குகள் குடும்பத்தை ஏமாத்தி தன் கூட்டணில சேக்குது ரக்கூன். கடைசில என்ன ஆச்சுனு படத்துல பாருங்க.
RJ (Voice Bruce Willis) ஒரு புத்திசாலித்தனமான ஆனால் சுயநலம் மற்றும் பேராசை கொண்ட ஒரு ரக்கூன்.
இன்னொரு பக்கம் ஆமை, முள்ளம்பன்றி என அப்பாவியான விலங்குகள் குடும்பமா பனிக்கால உறக்கத்தில் இருந்து எந்திரிக்கின்றன. இவங்க தூக்கத்துல இருந்த காலத்துல மனிதர்கள் பாதி காடை அழிச்சு வீடு கட்டி வைச்சு இருக்கானுக.
கரடிகிட்ட இருந்து திருடுன Junk Food எல்லாத்தையும் எளிதாக திரும்ப கொடுக்க மனிதர்களிடம் கொள்ளை அடிக்க ப்ளான் பண்ணுது RJ.
இந்த விலங்குகள் குடும்பத்தையும் ஏமாத்தி தன் உதவிக்கு சேர்த்துக் கொள்கிறது இந்த RJ. மனிதர்கள் விலங்குகள் நடமாட்டத்தை பார்த்து அவைகளை அழிக்க ஒரு ஏஜன்சியை வேலைக்கு வைக்கிறார்கள்.
இந்த கலவரம் முடிஞ்சு RJ கரடிகிட்ட இருந்து தப்பித்ததா ? விலங்குகள் குடும்பம் என்ன ஆனது என்பதை சொல்கிறது படம்.
நல்ல ஜாலியான படம். குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் கண்டிப்பாக பார்க்கலாம். போகிற போக்கில் குடும்ப உறவின் முக்கியம் , ஜங்க் உணவுகள், காடுகள் அழிக்கப்படுவது போன்றவையும் தொட்டு செல்கிறது படம்.
கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்கலாம் 👍
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக