எனக்கும் 4 ஆம் வகுப்பு படிக்கும் எனது மகனுக்கு ஒரு சின்ன வாக்குவாதம்.
கொஞ்ச நாள் முன்னாடி வீட்டம்மா இவன் சரியா படிக்கலனு கம்பளெய்ன்ட். அந்த டைம்ல எனக்கும் படிக்க வேண்டியது இருந்தது.சரினு கூப்பிட்டு வைச்சு இங்க பாரு தம்பி அப்பா டெய்லி ரெண்டு மணிநேரம் படிக்கிறேன். நீ கொறஞ்சது ஒரு மணி நேரமாவது படிக்கணும்னு சொல்லி வைச்சேன். அவனும் சரி சரினு மண்டை ஆட்டினான் . கொஞ்ச நாள் படிக்கவும் செஞ்சான். அப்புறம் அப்படியே விட்டாச்சு.
நம்மளுக்கு வேற வழியில்லாமல் படிப்ப தொடர்ந்து கொண்டே இருந்தேன்.
இப்ப போனவாரம் மறுபடியும் அதே மாதிரி படிக்க மாட்டேன்கிறானு கம்ப்ளெய்ன்ட்.
நானும் பையன கூப்பிட்டு திட்டுனா சரி வராதுனு கொஞ்சம் காமெடியாக தம்பி மனுஷனுக்கு வாக்கு முக்கியம்டா நீ டெய்லி படிக்கிறேனு சொன்னேல ஆனா இப்ப நீ வாக்க மீறி படிக்காம சுத்துற இது தப்பு தம்பினு சிரிச்சுக்கிட்டே சொல்லிட்டு இருந்தேன். அப்பாலாம் அன்னிக்கு சொன்ன மாதிரி 2 மணிநேரம் படிச்சு சொன்ன வாக்கை காப்பாத்தி ட்டு இருக்கேன் பாருன்னு பேசிட்டு இருந்தேன்.
அமைதியாக இருந்தவன் கொஞ்சம் யோசிச்சுட்டு சும்மா வாக்கை காப்பாத்துறேனு பொய் சொல்லாதீங்க அப்படினு சொன்னான்.
நானும் என் மனைவியும் புரியாமல் குழப்பத்துடன் அவனை பாக்க...
நீங்க கூட தான் கொஞ்சம் நாள் முன்னாடி அம்மாவுக்கு செயின் வாங்கி தர்றேனு வாக்கு கொடுத்தீங்க ஆனா வாங்கியே தரலனு நேக்கா ஒரு குண்ட தூக்கி போட்டான். எனக்கு என்ன சொல்றதுனு தெரியல.
திரும்பி மனைவியை பார்த்தேன்.அவ்வளவு நேரம் எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்தவ போட்டா பாரு ஒரு யூ டர்ன்.
நீ சொல்றது சரி தான் தம்பி உங்க அப்பா எப்பவுமே இப்படித்தான் கொடுத்த வாக்கை காப்பாத்த மாட்டாருனு எதிரணில போய் சேர்ந்துட்டு ஒரு போடு போட்டா பாரு.. அப்படியே சரண்டர்..சரி சரி பேச்ச விடுங்கனு எந்திரிச்சு வெளில ஓடிட்டேன்.
எப்படி எல்லாம் லாக் பண்றாங்க இப்ப உள்ள பொடுசுகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக