Kungfu Killer (Kung Fu Jungle ) - 2014 - Review In Tamil
IMDb 6.4
Tamil dub ✅
Available @primevideo
அத ஹீரோ தடுத்து நிறுத்தினாரானு படத்தில் பாருங்கள்.
ஹீரோ (Donnie Yen ) ஒரு திறமையான தற்காப்புக் கலை நிபுணர். ஒரு சண்டையில் எதிராளியை கொன்று விடுகிறான். தான் செய்தது தப்பு என்பதை உணர்ந்து போலீஸில் சரணடைந்து ஜெயிலில் உள்ளான்.
ஊருக்குள் திடீரென தற்காப்புக் கலை நிபுணர்கள் ஒவ்வொருவராக கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.
இந்தக்கேஸை விசாரிக்க ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்படுகிறார். சிறையில் இருக்கும் ஹீரோ வில்லனை கண்டுபிடிக்க உதவுவதாகவும் பதிலுக்கு போலீஸ் இவருக்கு விடுதலை தர வேண்டும் என டீல் பேசி வெளி வருகிறார்
இன்னொரு பக்கம் கொலைகள் தொடர்ந்து நடக்கிறது. யார் இந்த கொலையாளி ? எதற்கு கொலைகள் செய்கிறான் ? ஹீரோ கொலைகளை தடுத்து நிறுததினானா என்பதை படத்தில் பாருங்கள்.
சும்மா சண்டை கொலை இல்லாமல் ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டர் டெவலப்மென்ட் நன்றாக உள்ளது.
ஆரம்பம் முதலே ஹீரோ வில்லன் ஒத்தைக்கு ஒத்தை சண்டையை நோக்கி நகர்கிறது படம்.
சண்டைக்காட்சிகள் எல்லாம் தெறிக்க விட்ருக்காங்க. ஆக்சன் பட பிரியர்கள் கண்டிப்பா பாருங்க 🔥🔥
Trailer Link :
கருத்துகள்
கருத்துரையிடுக