முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Indian Predator: The Butcher Of Delhi- 2022

Indian Predator: The Butcher Of Delhi - Tamil Review 


தலைநகரில் 2003 ஆம் வருடத்தில் இருந்து ஏகப்பட்ட கொலைகளை செய்து பிணத்தின் தலைகளை திஹார் ஜெயில் வாசலிலேயே போட்டு போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துட்டு இருந்த ஒரு சீரியல் கில்லர் பற்றிய டாக்குமெண்டரி. 

3 Episodes
IMDb 6.1 
Tamil dub ✅
Available Netflix

indian predator the butcher of delhi review in tamil,chandrakant jha,indian predator the butcher of delhi imdb,indian the butcher of delhi download



முன்னாடி எல்லாம் யாரும் அவ்வளவா டாக்குமெண்டரிகளை கண்டு கொண்ட மாதிரி தெரியலை ‌‌ஆனால் போன வருடம் வந்த  House Of Secrets - The Burari Deaths  கொஞ்சம் impact கொடுத்தது. அதுனாலயோ என்னமோ இன்னொரு Crime Documentary யோட வந்துருக்கு Netflix. 

ஒரு சைக்கோ கில்லர்  சின்ன தடயம் கூட இல்லாம வரிசையா கொல்றான். அது மட்டுமல்ல போலீஸுக்கு போன்‌ போட்டு அசிங்க அசிங்கமா திட்டுறான். முடிஞ்சா பிடிச்சுப் பாருன்னு சவால் விடுறான். இவனை‌ எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை சொல்கிறது இந்த டாக்குமெண்டரி.

2 எபிசோட் நல்லா இருக்கு. கடைசி எபிசோட் ஓவரா  கொலைகாரனுக்கு பில்டப் போடுறானுக.

இப்படி பட்ட ஆட்கள் எல்லாம் ஊருக்குள்ள சுத்துறானுகனு பாக்குறப்ப கொஞ்சம் பீதியா தான்‌ இருக்கு. 

ஒரு Forensic லேடி என்ன என்னமோ சொல்லுது.. மறுவாழ்வு தரணும்னு சொல்லுது. தனிப்பட்ட முறையில் எனக்கு இதில் உடன்பாடு இல்ல. இவ்வளவு கொலைகளை ப்ளான் பண்ணவன எல்லாம் தூக்குல போடாம பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கானுக. வெளில வந்தா இவனுக எல்லாம் சும்மா இருக்க மாட்டானுக.


Watch Trailer: 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

Suzhal - The Vortex - 2022

Suzhal - The Vortex - Tamil Series Review  விக்ரம் வேதா பட புகழ் புஷ்கர் - காயத்ரி உருவாக்கத்தில் கதிர் , ஐஸ்வர்யா ராஜேஸ்,ஸ்ரியா ரெட்டி மற்றும் பார்த்திபன் நடிபபில் Amazon Prime -ல் வெளிவந்துள்ள Crime Investigation Thriller .  IMDb 8.7 Tamil ✅ 1 Season , 8 Episode OTT Amazon Prime அழகான மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு சின்ன ஊர் சாம்பலூர். இந்த ஊரின் வாழ்வாதாரம் அங்கு உள்ள சிமெண்ட் தொழிற்சாலை.  அந்த தொழிற்சாலையின் யூனியன் லீடர் சண்முகம் ( பார்த்திபன்) அவரின் மூத்த மகள் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) . ஊரின் இன்ஸ்பெக்டர் ரெஜினா  (ஸ்ரியா) மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரை (கதிர்) .  ஊரில் ரொம்ப பிரபல திருவிழாவான 9 நாட்கள் நடைபெறும் மயான‌ கொள்ளை திருவிழாவை கொண்டாட ஊர்மக்கள் ரெடியாகிறார்கள்.  திருவிழாவின் முதல் நாள் அன்று இரவு இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன. சிமெண்ட் ஆலை தீப்பற்றி எரிகிறது மற்றும் அதே நாளில் சண்முகத்தின் இளைய மகள் நிலா காணமல் போகிறார்.  இரண்டு கேஸ் களையும் விசாரிக்க ஆரம்பிக்கும் ரெஜினா மற்றும் சக்கரை யார் குற்றவாளி என்பதை கண்டுபிடித்தார்களா என்பதை தரமான பல ட்விஸ்ட்களுடன் சொல்கிறது தொடர்.