Jurassic Park - 1993 - சிறுவயதில் படம் பார்த்த அனுபவம் எனக்கு இந்த படத்தை பத்தி எழுதனும்னு ரொம்ப நாளாக ஆசை. ஆனா பெரும்பாலானோர் பாத்து இருப்பாங்க . அதனால் முதன் முதலில் இந்த படத்தை பார்த்ததை பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். படம் இந்தியாவில் வந்த சமயம் 6th படித்துக் கொண்டு இருந்தேன் என நினைக்கிறேன்.அப்போது ஏது சாட்டிலைட் டீவி மற்றும் மொபைல். எந்த படமா இருந்தாலும் தியேட்டரே கதி. ஒரு நாள் க்ளாஸ் நடந்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் இருந்த என் நண்பன் காதில் மெதுவாக சொன்னான் "ஸ்கூல்ல இருந்து நாளைக்கு ஏதோ படத்துக்கு கூட்டிட்டு போறாங்களாம்டா காசு கட்டணும்னு ஒரு அமௌன்ட் சொன்னான். எவ்வளவு என்று ஞாபகம் இல்லை. என்ன படம் என்று கேட்டதற்கு "அது ஏதோ செத்து போன பயங்கரமான மிருகத்தை வச்சு எடுத்து இருக்காங்கடா என்றான். அப்ப வரைக்கும் டைனோசர் என்ற வார்த்தையை கேட்டதாக ஞாபகம் இல்லை. செத்து போன மிருகத்தை வச்சு எப்படி படம் எடுத்து இருப்பார்கள் என்ற ஒரே எண்ணம் தான் மண்டைல ஓடிட்டு இருந்தது. படத்தில் முதலில் வாயை பிளக்க வைத்த காட்சி அந்த ஹெலிகாப்டர் லேண்டிங். அந்த அருவி பக்கத்துல பிண்ணனி
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil