முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Suzhal - The Vortex - 2022

Suzhal - The Vortex - Tamil Series Review 


விக்ரம் வேதா பட புகழ் புஷ்கர் - காயத்ரி உருவாக்கத்தில் கதிர் , ஐஸ்வர்யா ராஜேஸ்,ஸ்ரியா ரெட்டி மற்றும் பார்த்திபன் நடிபபில் Amazon Prime -ல் வெளிவந்துள்ள Crime Investigation Thriller . 

IMDb 8.7
Tamil ✅
1 Season , 8 Episode
OTT Amazon Prime

Suzhal the vortex series review in tamil, Amazon Prime series in tamil, best investigation Thriller in tamil, tamil mini series review, சுழல் சீரிஸ் விமர்சனம்



அழகான மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு சின்ன ஊர் சாம்பலூர். இந்த ஊரின் வாழ்வாதாரம் அங்கு உள்ள சிமெண்ட் தொழிற்சாலை. 

அந்த தொழிற்சாலையின் யூனியன் லீடர் சண்முகம் ( பார்த்திபன்) அவரின் மூத்த மகள் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) . ஊரின் இன்ஸ்பெக்டர் ரெஜினா  (ஸ்ரியா) மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரை (கதிர்) . 

ஊரில் ரொம்ப பிரபல திருவிழாவான 9 நாட்கள் நடைபெறும் மயான‌ கொள்ளை திருவிழாவை கொண்டாட ஊர்மக்கள் ரெடியாகிறார்கள். 

திருவிழாவின் முதல் நாள் அன்று இரவு இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன. சிமெண்ட் ஆலை தீப்பற்றி எரிகிறது மற்றும் அதே நாளில் சண்முகத்தின் இளைய மகள் நிலா காணமல் போகிறார். 

இரண்டு கேஸ் களையும் விசாரிக்க ஆரம்பிக்கும் ரெஜினா மற்றும் சக்கரை யார் குற்றவாளி என்பதை கண்டுபிடித்தார்களா என்பதை தரமான பல ட்விஸ்ட்களுடன் சொல்கிறது தொடர். 

முதலில் புஷ்கர்-காயத்ரி அவர்களின் ரைட்டிங். பற்றி சொல்லியே ஆக வேண்டும். செம எங்கேஜிங்.. யார் குற்றவாளி என்பதை யூகிக்க முடியாதவாறு சிறப்பாக எபிசோட்களை நகர்த்திய விதம் 🔥

அடுத்து இசை .. C.S. Sam பிண்ணனி இசையில் பிண்ணி பெடலெடுத்து இருக்கிறார். 

ஒளிப்பதிவு மற்றும் லொக்கேஷன்கள் தொடரின் பெரிய ப்ளஸ். பெரும்பாலான இடங்களில் ஒரு மாதிரியான மஞ்சள் நிறம்  சூப்பராக இருக்கிறது. திருவிழா காட்சிகள் சிறப்பாக படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர். 

இதற்கு மேல் பேசினால் ஸ்பாய்லர் ஆகி விடும்.

மொத்தத்தில் சிறப்பான ஒரு தொடர். சமூகத்தில் ஒரு முக்கியமான பிரச்சினையை சொல்லி ,  பிற்பகுதியில் சிறப்பான பல ட்விஸ்ட்களுடன் முடிகிறது. 

ரொம்ப நாள் கழித்து போலீஸ் கதாபாத்திரத்தில் ஸ்ரியா சிறப்பான தேர்வு. பார்த்திபன், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாக நடித்துள்ளார்கள்.

கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥🔥

Directed by:
Bramma G
Anucharan Murugaiyan

Starring:
Aishwarya Rajesh
Kathir
R. Parthiban
Harish Uthaman
Sriya Reddy

Music by: 
Sam C. S.


Trailer: 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க