Identity - 2003
ஒரு பக்காவான சைக்காலஜிக்கல் திரில்லர். புயலில் சிக்கிய 10 பேர் ஒரு மோட்டலில் தஞ்சம் அடைகிறார்கள். ஆனால் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.
யார் தப்பித்தது ? கொலைகாரன் யார் ? என்பதை படத்தில் பாருங்கள்.
IMDb 7.3
Tamil dub ❌
OTT ❌
படம் ஆரம்பத்தில் ஹாரர் படம் மாதிரி ஆரம்பித்து அப்படியே Slasher படம் மாதிரி போகுது.
அதுக்கு அப்புறம் பக்காவா ட்விஸ்ட்களை வைச்சு படம் முடியுது.
பாதி படத்துக்கு மேல என்ன நடக்குதுனு தெரியாம.. யார் கொலைக்காரனா இருக்கும் என்ற யூகத்தில் படம் பரபரப்பா நகருது.
இன்னொரு பக்கம் திடீர்னு கோர்ட் ஜட்ஜ் எல்லாம் கூட்டம் போட்டு ஒரு மரண தண்டனை கைதி பற்றி பேசுறாங்க.
இரண்டுக்கு ஏதோ ஒரு கனெக்சன் இருக்கிறது என்று தெரிந்தாலும் அதை கனெக்ட் செய்த விதம் அருமை.
கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥
கருத்துகள்
கருத்துரையிடுக