பின்கேர்டிப் சீசன் 2 ரிவியூ | Fingertip Season 2 Web series Review
Web Series Name: Fingertip
Season: 2
Episodes: 8
OTT: Zee5
பின்கேர்டிப் வெப் சீரிஸ் சீசன் 1 ஆகஸ்ட் 21, 2019 ரிலீஸ் ஆச்சு. இதுல அக்ஷரா ஹாசன், அஸ்வின், சுனைனா, காயத்ரி , மதுசூதன் நடிச்சு இருந்தாங்க. சீனிவாசன் ஷிவ்கர் டைரக்ட் பண்ணிருந்தாரு. இவரு தான் இப்ப சீசன் 2 வையும் டைரக்ட் பண்ணிருக்காரு. முதல் சீசன் 5 எபிசோடும் 2ஆவது சீசன் 8 எபிசோடும் இருக்கு. இதுல சொல்ல வந்த விஷயம் ஒண்ணுனாலும் ரெண்டு சீசன்கும் சம்மந்தம் இல்ல. 2ஆவது சீசன ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் பண்ணிருக்காங்க ரெண்டு சீசனையும் ஜீ 5 ரிலீஸ் செஞ்சுருக்காங்க.
2ஆவது சீசன் ல பிரசன்னா , ரெஜினா , வினோத் கிஷன் , அபர்ணா பாலமுரளி , திவ்யா , ஷரத் ரவி, கண்ணா ரவி ன்னு எல்லாரும் வராங்க. போலீஸா பிரசன்னா செமயா செட் ஆகுறாரு இன்னும் கொஞ்சம் பிட் ஆகிருந்தா மெர்சலா இருந்திருக்கும். நடிகையாவே ரெஜினா வராங்க. மத்த எல்லாரும் கொடுத்த கதாபாத்திரத்த சிறப்பாவே பண்ணிருக்காங்க.
எபிசொட் நகர நகர நம்ம கை ல இருக்குற மொபைல பாத்து நாமே பதட்ட படுற அளவுக்கு இருக்கு இந்த சீரிஸ். சோசியல் மீடியா, இன்டர்நெட் னால நடக்குற பிரச்சனைய லாம் புட்டு புட்டு வெச்சிருக்காரு டைரக்டர். டிஜிட்டல் டிப்ரெஸ்ஷன் பத்திலாம் சொன்ன விதம் மெய்யாலுமே அருமை.
ரெஜினா, வினோத் கிஷன் சீன் லாம் சைபர் கிரைம் பத்தி லாம் எடுக்கணுமே எடுத்த மாதிரி இருக்கு மத்தபடி இவங்க வர சீன் லாம் எடுத்துட்டா கூட பெருசா பாதிப்பு இருக்காது. இவங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்த ரொம்பவே சூப்பரா பண்ணிருந்தாங்க. ஷரத் ரவி, கண்ணா ரவி லாம் அப்டியே பத்து பொருத்தமும் பொருந்துற மாதிரி கேரக்டர். சோசியல் மீடியா ட்ரோல்ல்ஸ் லாம் எப்படி ஆரம்பிக்குது யாரை எப்ப ட்ரெண்ட் ஆக்கணும்னு காட்டுற சீன் லாம் நிஜ உண்மைய சொல்லுது.
திரைக்கதை இன்னும் வேகப்படுத்தி இருந்தா இப்ப பாக்குறத விட அருமையா வந்துருக்கும். சோசியல் மீடியா ,சைபர் கிரைம் ன்னு பாக்க பிடிக்கும் ன்னு அவங்க லாம் மட்டும் பாக்காம எல்லாரும் கண்டிப்பா பாக்க வேண்டிய வெப் சீரிஸ் தான் பின்கேர்டிப் 2. அடுத்த பார்ட் கான லீட் கொடுத்த விதமும் சூப்பர்.
சினிமா செய்திகள், விமர்சனங்கள் தெரிஞ்சிக்க, மீம்ஸ் லாம் பாத்து ஜாலியா சிரிச்சிட்டே இருக்க GDvignesh இணையதளத்த பாருங்க.
கருத்துகள்
கருத்துரையிடுக