Crimes Of The Future Tamil Review
மனித உடலின் பரிணாம வளர்ச்சி பற்றி பேசும் படம். கொஞ்சம் புரியவும் இல்ல. மெதுவா போகுது கொடூரமான மற்றும் நிர்வாண காட்சிகள் நிறைய இருக்கு.
IMDb 6.4
Tamil dub ❌
OTT ❌
படத்தின் ஆரம்பமே கொடூரமா தான் இருக்கு. ஒரு சின்ன பையன் பிளாஸ்டிக் பக்கெட்ட தின்னுட்டு இருக்கான்.
மனிதர்களின் பரிணாம வளர்ச்சி உச்சத்துக்கு போய் மனித உடலில் புது புது உறுப்புகள் வளர ஆரம்பிக்கின்றன.
இந்த வளர்ந்த உறுப்புகளை லைவ்வா பப்ளிக்ல ஆப்பரேஷன் பண்ணி வெளிய எடுக்குறத ஆர்ட்னு சொல்லிட்டு ஒரு குரூப் சுத்துது.
இன்னொரு பக்கம் தன் இறந்த மகனின் உடலை இது மாதிரி ஒரு லைவ் ஷோவில் போஸ்ட்மார்ட்டம் பண்ணணும்னு சொல்றான் ஒருத்தன்.
ஏன் அது மாதிரி பண்ண சொல்றான் ? பிளாஸ்டிக் தின்ன சிறுவன் யாரு? போன்றவற்றை இணைக்கிறது படம்.
இந்த படத்தை பத்தி எப்படி தெளிவாக எழுதுவது என்று தெரியவில்லை. சில இடங்கள் புரியவில்லை.
வித்தியாசமான படம் பாக்கனும் என்றால் பாருங்கள்.
Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக