இது ஒரு அனிமேஷன், காமெடி படம்.
ஓநாய், பாம்பு, சுறா, சிலந்தி, பிரான்கா மீன் என இவங்க 5 பேரும் ப்ரண்ட்ஸ் + கொள்ளைக்காரர்கள்.
IMDb 6.9
Tamil dub ❌
OTT ❌
With Family ✅
ஒரு கட்டத்தில் திருந்தி வாழ சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதை உபயோகித்து நல்லவர்களாக மாறினனார்களா என்பதை சொல்கிறது படம்.
படத்தின் ஆரம்பம் அதிரடியான ஒரு பேங்க் கொள்ளை மற்றும் அதை தொடர்ந்து ஒரு கார் சேஸிங் உடன் பரபரவென ஆரம்பிக்கிறது.
ஒரு கட்டத்தில் போலீஸிடம் மாட்டிக் கொள்கிறது இந்த குரூப். அப்ப அங்கு வரும் சமூக சேவகரான Guinea Pig இவர்களை திருத்துவது எனது பொறுப்பு என அந்த ஊர் கவர்னரிடம் வாக்கு கொடுத்து கூட்டிட்டு வறார்.
இவர்களை திருத்தினாரா என்பதை படத்தில் பாருங்கள்.
படம் ஆரம்பத்தில் பரபரவென இருந்தாலும் அப்புறம் கொஞ்சம் ஸ்லோவா தான் நகர்கிறது. பிற்பகுதியில் சில ட்விஸ்ட்கள் உண்டு.
ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க ஏற்ற நல்ல பொழுதுபோக்கு படம். 👍👍
கருத்துகள்
கருத்துரையிடுக