Season 4 - Vol 2
வில்லன் Vecna உண்மையிலேயே யாருனு ஒரு சூப்பர் ட்விஸ்ட் உடன் முடிந்தது Vol 1.
நேத்து Vol 2 ல் மிச்சம் உள்ள இரண்டு எபிசோட்கள் வெளிவந்து உள்ளது.
இந்த எபிசோட்கள் Vecna வை அழிக்க நண்பர்கள் அனைவரும் சேர்ந்த போராடுவதை பற்றியது.
இந்த சீசன் முழுவதும் வேறு வேறு இடத்தில் (Hawkins, Russia, Lab ) நடக்கிறது.
நல்ல Engaging'a போரடிக்காமல் போகிறது.
அடுத்த சீசனுக்கு லீட் கொடுத்து முடித்து இருக்கிறார்கள்.
சூப்பரான சீசனுக்கு பக்கா Ending..
Waiting for 5th Season ...
Season - 4 - Vol - 1
மிகப்பிரபலமான இந்த தொடரின் 4வது சீசன் வெளியாகி உள்ளது. இந்த முறை தமிழ் டப்பிங் உடன் வந்து உள்ளது .
IMDb 8.7
Season 4, 7 Episodes
Available @Netflix
இந்த தொடரை பத்தி விரிவாக எழுதுவது ரொம்பவே கஷ்டம் . ஏனென்றால் இந்த தொடரின் கான்செப்ட் அப்படி மற்றும் ஸ்பாய்லர் ஆகிவிடும்.
சுருக்கமாக சொல்வது என்றால் Parallel Universe கான்செப்ட் இந்த தொடரில் முக்கியமான ஒன்று.
வேறு உலகத்தில் இருந்து கொடூரமான மிருகம் ஒரு பாதையை உருவாக்கி நாம் வாழும் உலகத்திற்கு வந்தால் என்ன ஆகும் ?
இதனை தடுக்க ஸ்கூல் பசங்க + பொண்ணுங்க குரூப் முயற்சி பண்ணுது.
இன்னொரு முக்கியமான கேரக்டர் Eleven . இவங்க பயங்கரமான பவர் கொண்ட ஒரு பெண். இவரின் பவரை உபயோகித்து இன்னொரு உலகத்திற்கு வழியை உருவாக்கிட முடியும். இந்த சீசனில் இவளின் சக்தி காணாமல் போய்விடுகிறது. அதை திரும்ப பெறும் முயற்சியில் உள்ளார்.
இந்த பசங்களுக்கு உதவி பண்ணிய உள்ளூர் போலீஸ்காரர் ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்டு சிறையில் உள்ளார். அவரை காப்பாற்ற முயற்சி செய்யும் கதை வேறு ட்ராக்கில் போகிறது.
முதல் ரெண்டு எபிசோட்கள் கொஞ்சம் மெதுவாக போனாலும் அடுத்து வரும் எபிசோட்கள் பரபரவென போகிறது.
அதுவும் 7 வது எபிசோட் 🔥🔥 Wow சொல்ல வைக்கும் ரகம். இந்த சீசனில் இன்னும் 2 எபிசோட்கள் ஜூலை மாதத்தில் வெளிவருகிறது 🤞
முந்தைய சீசன்கள் பார்த்துவிட்டு இந்த சீசனை பார்ப்பது நல்லது.
Highly Recommended 🔥🔥🔥🔥🔥
கருத்துகள்
கருத்துரையிடுக