ஒரு டீசன்ட்டான Heist படம். 1990 களில் நடப்பது போன்று பக்காவாக எடுக்கப்பட்டுள்ளது.
முதல் பாதி கொஞ்சம் இழுவை , இரண்டாவது பாதி ரொம்ப நல்லா இருந்தது.
அறிமுக இயக்குனர் + படத்தின் ஹீரோ உண்மையாக நடந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
ஹீரோ அப்பவே கம்யூட்டர் தான் எதிர்காலம் என்று படித்து மென்பொருள் துறையில் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்.
இந்தியாவுக்கு வந்து சாப்ட்வேர் பிஸினஸ் ஆரம்பிக்க லோனுக்கு அலைகிறார்.
அவரது அப்பா அந்த ஊர் போஸ்ட் ஆபீஸில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்க்கிறார்.
ஒரு நாள் போஸ்ட் ஆபிஸில் இருந்து லட்சக்கணக்கான பணம் திருடு போய்விடுகிறது.
தன் அப்பாவை காப்பாற்ற காதலி மற்றும் நண்பன் துணையுடன் விசாரணையில் இறங்குகிறார் ஹுரோ.
பணத்தை கண்டுபிடித்து அப்பாவை காப்பாற்றினாரா என்பதை படத்தில் பாருங்கள்.
1990 களின் செட்டிங்ஸ் அருமை. முதல் பாதி இழுவையை இரண்டாவது பாதியில் சரிகட்டி விடுகிறது படம். அடுத்த பாகத்திற்கான லீட் வைத்து படத்தை முடித்து உள்ளார்கள்.
கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம்
இயக்கம் - பிரவீண்
இசை - தென்மா
நடிப்பு - பிரவீண், அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர்
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக