முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Love, Death Robots Season 3 - 2022

இது ஒரு அடல்ட் அனிமேசன் சீரிஸ் . எல்லாமே தனி தனி கதைகள் நிறைய Genre ல இருக்கும். 

9 Episodes

IMDb Rating - 8.4

Tamil dub ❌

Available @netflix

ஒவ்வொரு எபிசோடும் 5 - 20 நிமிஷம் வரைக்கும் ஓடும். 

Three Robots: Exit Strategies - 

உலகம் அழிந்து போன பின்ப 3 Robot என்ன நடந்து இருக்கும்னு ஆராய்ச்சி பண்ண வர்றத பற்றியது.

கடைசில Elon Musk னு நினைச்சியானு சொல்றது சூப்பர் . 

Decent one 👍

Bad Traveling - இது செம் எபிசோட். டைரக்டர் யாருனு பார்த்தா David Fincher. 

கப்பல்ல ஒரு ஏலியன் எல்லாரையும் கொல்லுது ஆனா ஒருத்தன் அது கூட பேச்சு வார்த்தை நடத்தி agreement போட்டு பயணத்தை தொடருகிறார்கள்.  

One of the best episodes of the season 👍

Night Of The Mini Dead - குட்டி குட்டியான ஜோம்பிகளை வைத்து வித்தியாசமா ட்ரை பண்ண இருக்காங்க. Good one ☺️

Kill Team Kill - பழைய ஸ்டைல் அனிமேஷன். அமெரிக்க உருவாக்குன ஒரு ரோபோ கரடி அவர்களையே தாக்குகிறது. இதை எப்படி சமாளித்தார் கள் என்பதை பற்றிய எபிசோட். 

Good one 👍

Swarm -  

வேறுகிரகத்தில் Swarm என சொல்லப்படும் இடத்தில் பல வகையான மிருகங்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.‌இதனை ஆராய்ச்சி செய்ய போகும் இரண்டு பேர் பற்றிய தொடர். 

இந்த சீசனில் இன்னொரு அருமையான எபிசோட்.  Very good one 👍

Mason's Rats - 

விவசாயி Mason க்கு எலிகளால் பயங்கர தொல்லை இதனை தடுக்க Pest Control கம்பெனியிடம் இருந்து மெஷின் வாங்கி மாட்டுகிறார். ஆனால் எலிகள் பதிலுக்கு திருப்ப அடிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்..‌‌

இன்னொரு அருமையான எபிசோட் very good one 💥 

In Vaulted Halls Entombed

Hostage rescue பண்ண போற ஒரு டீம் எதிர்பாராத விதமாக ஒரு Monster ஐ சிறை வைத்து இருக்கும் இடத்தில் மாட்டிக்கொண்டு சந்திக்கும் பிரச்சினைகள். 

Good one 👍

The Very Pulse Of the machine & Jibaro - இரண்டும் கொஞ்சம் சுமார் ரகம் . 


மொத்தத்தில் சிறப்பான ஒரு சீசன்.‌ எல்லாமே தனி தனி குட்டி கதைகள் என்பதால் எந்த வரிசையில் வேண்டுமானாலும் பார்க்கலாம்.


சில எபிசோட்கள் ரொம்ப வயலண்ட் இருக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்