செமயான ஒரு சைக்காலஜிகல் திரில்லர்.
IMDb 7.2
Tamil dub ❌
OTT ❌
FBI பரபரப்பா ஒரு சீரியல் கில்லரை தேடுறாங்க . ஒருத்தன் சரண்டர் ஆகி என் தம்பி தான் அந்த கில்லர்னு சொல்றான். எதன் அடிப்படையில் தம்பி தான் குற்றவாளி என்பதை தன் சிறுவயது கதை மூலம் சொல்ல ஆரம்பிக்கிறான்.
ஃப்ளாஷ் பேக்கில் அம்மா இல்லாமல் அப்பாவால் பாசமாக வளர்க்கப்படும் சகோதரர்கள் (10 &8 வயது) . ஒரு நாள் அப்பா, கடவுள் என்கிட்ட வந்து பேசுனாரு கெட்ட சக்திகளை அழிக்க சொல்லி லிஸ்ட் கொடுத்தாருனு சொல்லி மனிதர்களை கொல்ல ஆரம்பிக்கிறார்.
இதற்கு இரண்டு மகன்களையும் உதவிக்கு வைத்து கொள்கிறார். அண்ணனுக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாமல் தந்தைக்கு உதவியாக இருக்கிறான்.
இந்த மாதிரி இளம் வயதில் மனதளவில் பாதிக்கப் படுகிறார்கள் இரண்டு சிறுவர்களும்.
இந்த கதையும் , நிகழ்கால நிகழ்வுகளும் படத்தை தொய்வு இல்லாமல் நகர்த்துகிறது. படத்தின் கடைசி கட்டத்தில் தரமான ட்விஸ்ட்டுகள் உள்ளன.
படத்தில் ரத்தமே தெறிக்காமல் ரத்தம் தெறிக்கும் காட்சிகளை எடுத்து இருப்பார்கள்.
நல்ல படம் மக்களே கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥
கருத்துகள்
கருத்துரையிடுக