Ex Machina - 2014
ரொம்ப நாளா வாட்ச் லிஸ்ட்ல இருந்த படம்.
IMDb 7.7
Tamil dub ❌
Available in primevideo
பெண் உருவில் உள்ள அட்வான்ஸ்டு ரோபாட்டை டெஸ்ட் பண்ண முயற்சி செய்யும் இரண்டு பேரை அந்த ரோபோட் வச்சு செய்வது தான் படம்.
நல்ல ஒரு வித்தியாசமான Sci Fi படம்.
ஒரு பெரிய கம்பெனி ஓனர் தான் வடிவமைத்த ரோபோவை டெஸ்ட் பண்ண தன்னுடைய எம்ப்ளாயி ஒருவனை தேர்ந்து எடுத்து தனிமையில் உள்ள ஒரு லேப்க்கு கூட்டிட்டு போறார்.
அங்க நெறய டெஸ்ட்டுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. கடைசியில் அந்த ரோபோ டெஸ்ட்டில் பாஸ் பண்ணுச்சா இல்லை இவனுகளுக்கு அந்த ரோபோ டெஸ்ட் வச்சுச்சா என்பதை படத்தில் பாருங்கள்.
நல்ல ஒரு படம். கொஞ்சம் ஸ்லோவா தான் போகும். மேக் அப் , கிராபிக்ஸ் என எல்லாமே சூப்பர்.
ரோபோவாக நடித்த அந்த பெண் செம நடிப்பு.
கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥
கருத்துகள்
கருத்துரையிடுக