Dark Waters Tamil Review
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
IMDb 7.6
Tamil dub ❌
Available @sonyliv
கெமிக்கல் கம்பெனிகளுக்காக வாதாடும் வக்கீல் தான் ஹீரோ (Rob) . ஒரு நாள் அவரது பாட்டி அனுப்பி வைத்தார்கள் என சொல்லி விவசாயி ஒருவர் வருகிறார். அவரது மாடுகள் தொடர்ந்து இறந்து வருவதாகவும் , மனிதர்களுக்கும் நிறைய பிரச்சினைகள் வருவதாகவும் இதற்கு காரணம் DuPont என்ற கெமிக்கல் கம்பெனி தான் காரணம் என்கிறார்.
Rob தனக்கு தெரிந்த தொடர்புகளை வைத்து அந்த ஊரின் தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் ரிப்போர்ட் ரகளை வாங்கி பார்த்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை
ஆனால் அதற்கு அப்புறம் நடக்கும் ஒரு சம்பவத்தை தொடர்ந்து முழு மூச்சாக இந்த கேஸில் இறங்குகிறார்.
எந்த கெமிக்கலில் பிரச்சினை, எவ்வாறு அதை கண்டுபிடித்தார், மிகப்பெரிய கம்பெனியை எதிர்த்து வழக்கில் ஜெயித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தந்தார என்பதை படத்தில் பாருங்கள்.
இந்த படத்தில் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு மற்றும் அதனால் ஏற்படும் கொடிய பின்விளைவுகள் பற்றி சொல்கிறது. அந்த முக்கிய கண்டுபிடிப்பு தான் Teflon .
நம்ம ஊர்லயும் இந்த Teflon பூசிய நான் ஸ்டிக் பாத்திரங்கள் பிரபலமாக இருந்ததாக ஞாபகம்.
கார்ப்பரேட் கம்பெனிகளின் ஊழல்கள், அதை மறைக்க செய்யும் தில்லு முல்லுகள் அதை தனியாக எதிர் கொள்ளும் லாயர் என போகிறது படம்.
பெரிய மற்றும் திறமையான நடிகர்கள் படத்தின் பலம்
Starring: Mark Ruffalo; Anne Hathaway; Tim Robbins; Bill Camp; Victor Garber; Mare Winningham; Bill Pullman
கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍
கருத்துகள்
கருத்துரையிடுக