Amistad Tamil Review
IMDb 7.3
OTT ❌
Tamil Dub ❌
1839 களில் அடிமைகளாக சிக்கிக்கொண்ட ஆப்பிரிக்காவை சேர்ந்த குழு அமெரிக்காவில் தங்களின் விடுதலைக்காக சந்திக்கும் சட்டப் போராட்டம் பற்றிய படம்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நல்ல ஒரு Court room Drama.
Spielberg , ஒடுக்கப்பட்ட இன மக்கள் சந்திக்கும் போராட்டங்கள் என்றவுடன் Schindler's List படம் ஞாபகம் வருவதை தடுக்க முடியாது.
அதுவும் இந்த படத்தில் Matthew McConaughey, Anthony Hopkins, Morgan Freeman, Chiwetel Ejiofor, Djimon Hounsou எனப் பெரிய நட்சத்திர பட்டாளம் வேறு.
ஸ்பானிஷ் கப்பலில் கொத்தடிமைகளாக ஒரு கூட்டத்தை கடத்தி வருகிறார்கள் ஒரு கூட்டம்.
ஒரு கட்டத்தில் அடிமைகள் கூட்டம் பொங்கி எழுந்து தங்களை கட்டுப்படுத்திய கூட்டத்தை போட்டுத்தள்ளி விடுகிறார்கள்.
ஒரு வழியாக கரை வந்து சேர்ந்தால் இறங்கிய இடம் அமெரிக்கா. அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
நிறைய பேர் அடிமைகள் தங்களுக்கு சொந்தம் என வாதாடுகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக ஒரு இளம் வக்கீல் வாதாடுகிறார். ஒரு கட்டத்தில் கேஸ் சிக்கலாகி விட சீனியர் வக்கீல் மற்றும் முன்னாள் அதிபர் உதவியை நாடுகின்றனர்.
கடைசியில் இருவரும் சேர்ந்து விடுதலை வாங்கி தந்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
எல்லாரும் நல்ல நடிப்பு குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் Anthony Hopkins 👌
Morgan Freeman நடிப்பை வெளிப்படுத்த சந்தர்ப்பம் எதுவும் இல்லை
அடிமைகளை கொடுமைப்படுத்தும் காட்சிகள் ரொம்பவே கொடூரமாக இருந்தது.
Schindler's List பட அளவுக்கு இல்லை என்றாலும் நல்ல படம். கண்டிப்பாக பாருங்கள் 👍👍
கருத்துகள்
கருத்துரையிடுக