இந்த படத்தின் முதல் பாகம் செமயாக இருக்கும். இதுல வர்ற ஏலியன் சின்ன சத்தம் கேட்டா புயல் வேகத்தில் எங்க இருந்தாலும் வந்து அடிச்சு காலி பண்ணிட்டு போய்டும்.
IMDb 7.2
Tamil dub ✅
OTT Amazon
ஏலியன்களை கொல்லும் வழியை கண்டுபிடிச்ச ஒரு சின்ன பொண்ணு அது எப்படி எல்லாருக்கும் சொல்லி ஏலியன்ஸ்க்கு எதிரா போராட்டத்தை ஆரம்பிக்கிறாள் என்பது தான் இந்த பாகம்.
ஒரு குரூப் போனாங்க ஏலியன் ஒவ்வொருத்தரயா கொன்னுச்சு ஒருத்தர் மட்டும் தப்பித்து வந்தார் என்று இல்லாமல்.
சிம்பிளா ஒரு ஸ்டோரி லைன் வச்சு ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் நடக்கும் காட்சிகளை வைத்து அருமையாக படத்தை கொண்டு சென்று உள்ளனர்.
படத்தின் பல இடங்களில் அமைதி தான் , தேவையான இடத்தில் பிண்ணனி இசை சஸ்பென்ஸ் என எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.
கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥
முதல் பாகம் பார்க்கனும் என்று அவசியமில்லை. ஆனால் பார்த்து விட்டு இந்த பாகம் பார்த்தால் சிறப்பாக இருக்கும் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக