Season 4 - Vol 2 வில்லன் Vecna உண்மையிலேயே யாருனு ஒரு சூப்பர் ட்விஸ்ட் உடன் முடிந்தது Vol 1. நேத்து Vol 2 ல் மிச்சம் உள்ள இரண்டு எபிசோட்கள் வெளிவந்து உள்ளது. இந்த எபிசோட்கள் Vecna வை அழிக்க நண்பர்கள் அனைவரும் சேர்ந்த போராடுவதை பற்றியது. இந்த சீசன் முழுவதும் வேறு வேறு இடத்தில் (Hawkins, Russia, Lab ) நடக்கிறது. நல்ல Engaging'a போரடிக்காமல் போகிறது. அடுத்த சீசனுக்கு லீட் கொடுத்து முடித்து இருக்கிறார்கள். சூப்பரான சீசனுக்கு பக்கா Ending.. Waiting for 5th Season ... Season - 4 - Vol - 1 மிகப்பிரபலமான இந்த தொடரின் 4வது சீசன் வெளியாகி உள்ளது. இந்த முறை தமிழ் டப்பிங் உடன் வந்து உள்ளது . IMDb 8.7 Season 4, 7 Episodes Available @Netflix இந்த தொடரை பத்தி விரிவாக எழுதுவது ரொம்பவே கஷ்டம் . ஏனென்றால் இந்த தொடரின் கான்செப்ட் அப்படி மற்றும் ஸ்பாய்லர் ஆகிவிடும். சுருக்கமாக சொல்வது என்றால் Parallel Universe கான்செப்ட் இந்த தொடரில் முக்கியமான ஒன்று. வேறு உலகத்தில் இருந்து கொடூரமான மிருகம் ஒரு பாதையை உருவாக்கி நாம் வாழும் உலகத்திற்கு வந்தால் என்ன ஆகும் ? இதனை தடுக்க ஸ்கூல் பசங்க +
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil