Shudder - ல் வெளிவந்துள்ள ஒரு Spanish ஹாரர் ஜாம்பி சர்வைவல் படம் இது.
IMDb 5.5
Tamil dub ❌
இதுல வர்ற ஜாம்பிகள் ஒரு அட்டாக் பணணுச்சுனா மறுபடியும் அட்டாக் பண்ண 32 நொடிகள் எடுத்துக் கொள்ளும்.
ஒரு பாழடைந்த பில்டிங்கில் மாட்டிக்கொண்ட தாயும் மகளும் தப்பித்தார்களா என்பது தான் படம்.
ஹீரோயின் ஒரு மூடப்பட்ட பாழடைந்த க்ளப்பில் வேலை செய்கிறார். மகளையும் ஒரு நாள் வேலை செய்யும் இடத்திற்கு கூட்டி வர வேண்டியது ஆகிறது. அந்த நேரத்தில் மனிதர்கள் ஜாம்பியாக மாறி உள்ளே நுழைய ஆரம்பிக்கிறார்கள்.
இதில் வரும் ஜாம்பிகள் கடித்து தின்பது எல்லாம் கிடையாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அதீத வன்முறை குணம் கொண்டு கண்ணில் பட்டவற்றை எல்லாம் அடித்து காலி பண்ணுகிறார்கள்.
இந்த நிலையில் ரவுண்ட்ஸ் போகும் ஹீரோயின் மகளை ஒரு ரூமில் விட்டு செல்ல இந்த ஜாம்பிகள் தாக்குதல் ஆரம்பமாகிறது.
பில்டிங் முழுவதும் ஜாம்பிகள் சூழ்ந்த நிலையில் மகள் இருக்கும் ரூமிற்கு வந்து மகளை காப்பாற்றினாரா என்பதை படத்தில் பாருங்கள்.
ஆவரேஜான ஜாம்பி ஹாரர் படம். 32 நொடிகள் கான்செப்ட்டை இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணி இருக்கலாம்.
பாழடைந்த க்ளப் செட்டப் படத்திற்கு நன்றாகவே யூஸ் ஆகி உள்ளது.
க்ளைமாக்ஸ் அவ்வளவு சரி இல்லை.
மற்றபடி IMDb rating சொல்லும் அளவிற்கு மோசமான படம் இல்லை.
ஜாம்பி படப்பிரியர்கள் கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக