The Tiger - A Hunter's Tale - 2015 Korean Movie Tamil Review
இது ஒரு கொரியன் ஆக்சன், அட்வென்சர் படம்.
50+ வயதில் இருக்கும் திறமையான வேட்டைக்காரன் ஹீரோ. சில கசப்பான அனுபவங்களால் வேட்டையை விட்டு விட்டு மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
ஆனால் ஒரு புலி எவ்வாறு இவரை மறுபடியும் துப்பாக்கி தூக்க வைத்தது என்பது தான் படம்.
படத்தின் டைரக்டர் Park Hoon-Jung. இவரின் முந்தைய படங்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம் I Saw The Devil.
Old Boy, Admiral போன்ற படங்களின் நாயகனான Choi Min Sik தான் ஹீரோ. நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
படம் நடப்பது 1925 களில் ஜப்பான் ஆக்ரமிப்பு செய்துள்ள கொரியாவில். ஜப்பான் ராணுவ ஜெனரலுக்கு அந்த மலையில் உள்ள எல்லா புலிகளையும் அழிதது விட வேண்டும் என்ற வெறி.
இதற்காக அந்த ஏரியாவில் வசிக்கும் இன்னொரு வேட்டைக்காரனிடம் இந்த வேலை கொடுக்கப்படுகிறது. இவர்கள் எல்லா புலிகளையும் கொன்று விட்டாலும் உள்ளூர் மக்களால் Mountain Lord என அழைக்கப்படும் ஒரு புத்திசாலி மற்றும் ஆக்ரோஷமான புலியை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இன்னொரு பக்கம் மனைவி கொடூரமாக புலியால் கொல்லப்பட்ட பிறகு வேட்டைத் தொழிலை விட்டுவிட்டு தனது மகனுடன் அந்த மலைப் பகுதியில் வசித்து வருகிறார் ஹீரோ.
ஜெனரல் மற்றும் மற்ற வேட்டைக்காரர்கள் ஹீரோவை பல முறை புலி வேட்டைக்கு உதவிக்கு வருமாறு அழைத்தும் போக மாட்டேன் என்கிறார். ஆனால் மகனுக்கோ அந்த புலியை கொன்று நிறைய காசு பணத்துடன் செட்டில் ஆக வேண்டும் என நினைக்கிறான்.
அந்த புலியை கொல்லமாட்டேன் என்று இருப்பவர் ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தூக்குகிறார்.
ஏன் அந்த புலியை கொல்ல மாட்டேன் என்று இருக்கிறார் ? இவர் ஏன் மறுபடியும் துப்பாக்கியை எடுத்தார்? குறிப்பாக அந்த புலி கொல்லப்பட்டதா என்பதை படத்தில் பாருங்கள்.
2.15 மணிநேரம் ஓடக்கூடிய நீளமான படம். ஆங்காங்கே கொஞ்சம் மெதுவாக போனாலும் ரொம்ப போர் அடிக்கவில்லை.
புலி வருது எல்லாரையும் கொல்லுது என்று இல்லாமல் பக்காவான சென்டிமென்ட் உள்ளது.
புலிக்கும் ஹீரோவுக்கும் நடுவே உள்ள அந்த உணர்வுப்பூர்வமான அந்த கனெக்சன் ரொம்பவே முக்கியமான ஒன்று.
பல இடங்களில் லாஜிக் மீறல்கள் உள்ளது. கிராபிக்ஸ் புலி சில இடங்களில் கொஞ்சம் பிசிறு தட்டினாலும் மொத்தமா பார்க்கும் போது நன்றாகவே உள்ளது.படத்தில் அந்த புலி தான் இரண்டாவது ஹீரோ.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் 🔥🔥🔥
கருத்துகள்
கருத்துரையிடுக