இன்னொரு கொரியன் வரலாற்று திரைப்படம். ரிடையர்டான வாள்வீச்சில் கிங்கான ஹீரோ மகளுடன் காட்டுக்குள் அமைதியாக வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில் மகள் கடத்தப்பட பழைய பன்னீர் செல்வமாக மகளை மீட்க கிளம்புகிறார்.
IMDb 6.8
Tamil dub ❌
OTT ❌
கண்பார்வையை இழந்து வரும் ஹீரோ சிகிச்சைக்காக நகரத்துக்குள் வர நேரிடுகிறது.
அடுத்து நடக்கும் சில சம்பவங்களால் அவரின் மகள் மனிதர்களை அடிமையாக்கி விற்கும் பவர்புல்லான ஒரு கூட்டத்தில் சிக்கிக் கொள்கிறாள்.
கண்பார்வை குறைந்து கொண்டே வர இருக்கும் சொற்ப நேரத்தில் மிகப்பெரிய படைகளை சமாளித்து மகளை மீட்டானா என்பதை படத்தில் பாருங்கள்.
கதை ரொம்பவே சிம்பிளான ஆனால் செம் பவர்புல்லான கதை . அருமையான திரைக்கதை படத்தை அழகாக நகர்த்தி செல்கிறது. முதல் பாதி முழுவதும் Plot செட் செய்யப்படுகிறது. இரண்டாவது பாதி பெரும்பாலும் ஆக்சன் சீக்குவன்ஸ் தான்.
வாள் சண்டை காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதுவும் துப்பாக்கியுடன் சண்டைக்கு வரும் வீரர்களுடன் வாள் சண்டையிடும் காட்சிகள் சிறப்பு. லாஜிக்கை யோசிக்க விடாமல் எடுத்த விதம் சிறப்பு.
ஹீரோவாக வருபவர் கலக்கி இருக்கிறார். அசால்ட்டாக வாளை கையாளும் விதம் சூப்பர்.
முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் Joe Taslim( Raid (லீடாக வருபவர்) , The Night Comes For Us பட ஹீரோ .. அவரது பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
அரசியல், சென்டிமென்ட் , ஆக்சன் என எல்லாவற்றையும் கலந்த ஒரு பக்காவான படம்.
கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥
கருத்துகள்
கருத்துரையிடுக