1956 ஆம் வருடத்தில் ஒரு டெய்லர் கடையில் ஒரே இரவில் நடக்கும் Brilliant ஆன க்ரைம் டிராமா.
IMDb 7.4
Tamil dub ❌
OT T ❌
இரண்டு கேங்குகளுக்குள் நடக்கும் பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார் ஒரு திறமையான டெய்லர்.
எப்படி தப்பிக்கிறார் என்பதை தரமான திரைக்கதை மூலம் சொல்லும் படம்.
Leonard ( Mark Rylance ) லண்டனில் இருந்து சிக்காகோவில் புலம்பெயர்ந்த ஒரு திறமையான டெய்லர். இவரின் கடையில் அசிஸ்டென்ட்டாக ஒரு பெண்ணை வேலைக்கு வைத்து உள்ளார்.
இவரின் அமைதியான சுபாவம் மற்றும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாத குணத்தால் அந்த ஏரியாவில் உள்ள ஒரு கேங் பண பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்ய இவரது கடையை உபயோகித்து வருகிறது.
ஒரு நாள் இரவு அந்த கேங் தலைவனின் மகன் எதிர் கேங்குடன் நடத்த சண்டையில் குண்டடிப்பட்டு அவனது கேங் ஆள் ஒருவனுடன் கடைக்குள் தஞ்சம் அடைகிறார்கள்.
அதற்கு அப்புறம் நடக்கும் ஒரு சம்பவம் பல சம்பவங்களை Trigger செய்து விடுகிறது. இதனால் டெய்லர் + அவரது அஸிஸ்டன்ட் உயிருக்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.
இதை எப்படி சமாளித்தார் என்பதை படத்தில் பாருங்கள்.
இயக்கம் + திரைக்கதை இணைந்து எழுதி இருப்பவர் Graham Moore . என்ன ஒரு அருமையான திரைக்கதை. மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து பிற்பாதியில் ட்விஸ்ட்கள் எல்லாம் தரம் . இவர் ஏற்கெனவே The Imitation Game படத்திற்காக Oscar வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமானவர் ஹீரோ Mark Rylance . இவர் BFG, Bridge Of the Spies போன்ற படங்களில் கலக்கி இருப்பார். இவரும் ஆஸ்கார் வாங்கியவர் தான்.
இவரது குரல் மிகப்பெரிய ப்ளஸ் படத்திற்கு. மனுஷன் கலக்கி இருக்கிறார்.
ஆக மொத்தம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று.
Highly Recommended 🔥
கருத்துகள்
கருத்துரையிடுக