நல்ல ஒரு கோர்ட் ரூம் டிராமா திரில்லர்.
வக்கீலான ஹீரோவை நல்லவன் போல நடிக்கும் அவரது க்ளையடண்ட்டான ஆன வில்லன் ஒரு கேஸில் எக்குத்தப்பாக மாட்டி விடுகிறான்.
அதிலிருந்து எப்படி ஹீரோ தப்பித்தான் என்பது விறுவிறுப்பான படம்.
Mick ஒரு சின்ன வக்கீல். கிடைக்கிற சின்ன சின்ன கேஸ் எல்லாம் எடுத்து நெறய பேரை வெளியே கொண்டு வருகிறார் அல்லது தண்டனையை குறைக்கிறார்.
ஒரு நாள் பெண் ஒருத்தி தாக்கப்பட்ட வழக்கில் ஒரு பெரிய பணக்கார இளைஞனை காப்பாற்றும் கேஸ் இவனிடம் வருகிறது.
ஹீரோவும் கேஸை எடுத்துக்கொண்டு வாதாட ஆரம்பிக்கிறான். ஆனால் போக போக அவன் க்ளையண்ட் சாதாரண ஆள் கிடையாது இதற்கு முன்னாள் பல குற்றங்களை செய்து நேக்காக தப்பித்து இருக்கிறான் என்று.
ஆனால் ஒரு க்ளைண்ட் செய்த குற்றங்களை வெளியே சொல்வது சட்டப்படி குற்றமாகும்.(Client - Attorney privilege) . அதனால் இதை பற்றி வெளியே சொல்ல முடியாது. இந்த சூழ்நிலையில் எப்படி ஹீரோ சமாளித்தார். வில்லனுக்கு எப்படி தண்டனை வாங்கி தந்தாரா? என்பதை படத்தில் பாருங்கள் .
படத்தில் நல்ல ஸ்கிரீன் ப்ளே.. போரடிக்காமல் நன்றாக நகர்கிறது படம.
வக்கீலாக Matthew McConaughey நடித்து இருக்கிறார். அருமையான நடிப்பு.. A Time to kill படத்தில் கடைசியாக இவரை வக்கீலாக பார்த்தது.
நல்ல படம் நண்பர்களே , கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍👍
கருத்துகள்
கருத்துரையிடுக