தரமான Sci Fi , Horror படம்.
கொடுமைப்படுத்தும் ஒரு விஞ்ஞானியான கணவரிடம் இருந்து தப்பித்து வருகிறார் ஹீரோயின்.
IMDb 7.1
Tamil dub ❌
OTT ❌
கணவன் தற்கொலை செய்து இறந்து விடுகிறான். செத்தாலும் விட மாட்டேன் என விரட்டுகிறான்.எப்படி என்று படத்தில் பாருங்கள்.
Optics துறையில் வல்லவரான ஒரு சைக்கோ விஞ்ஞானியின் மனைவி (Cecilia - Elizabeth Moss). அவனிடமிருந்து ஒரு நாள் தப்பித்து நண்பரின் வீட்டில் அடைக்கலம் ஆகிறார். சில நாட்களில் கணவன் தற்கொலை செய்து இறந்து விட்டான் என செய்தி வர நிம்மதி அடைகிறாள்.
ஆனால் நிம்மதி கொஞ்ச நாள் கூட இல்லாமல் தனது கணவன் இவளை பின்தொடர்ந்து வருவது போல தோன்றுகிறது.
சிறிது நாளில் பின்தொடர்வது போல தோன்றுவது வன்முறையாக மாறி அவளைச் சுற்றி இருக்கும் சில பேர் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஆனால் யார் தாக்குகிறார்கள் என்பது கண்ணுக்கு தெரியவில்லை.
கணவன் இறந்தது உண்மை தானா ? யார் இவளை பின்தொடர்ந்து வருவது ? என்பதை படத்தில் பாருங்கள்.
படத்தின் ஆரம்ப காட்சிகள் மிகவும் அருமை. நல்ல சஸ்பென்ஸ் உடன் படம் நகர்கிறது.
சில காட்சிகள் நம்மளே இதுக்கு தான் வைக்கிறாங்க என்பதை கண்டுபிடித்து விடலாம்.
மற்றபடி நல்ல பரபரவென சஸ்பென்ஸ் உடன் போகிறது படம்.
படம் முழுவதும் ஹீரோயினை சுற்றியே நகர்கிறது. ஹீரோயின் நன்றாக நடித்து இருக்கிறார். The Handmaid's Tale Series பார்த்தவர்களுக்கு இவரது நடிப்பை பற்றி தெரிந்து இருக்கும்.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍
கருத்துகள்
கருத்துரையிடுக