ஒரு தீயணைப்பு குழுவை பற்றிய உண்மைச் சம்பவங்களை தழவி எடுக்கப்பட்ட படம். குறிப்பாக 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்துடன் படம் முடிகிறது.
IMDb 7.6
Tamil dub ❌
OTT ❌
படம் ரொம்பவே நீளம் ஆனா கடைசில அழுக வைச்சுருவாங்க.
குழுவில் மொத்தம் 20 பேர் இருந்தாலும் இரண்டு பேரை சுற்றி நகர்கிறது.
ஒருவன் போதைக்கு பழக்கத்தில் இருந்து மீள முயற்சிக்கும் இளைஞன் தீயணைப்பு குழுவில் சேருகிறான்.
இன்னொருவர் அந்த குழுவின் தலைவர்.
இந்த குழுவின் பயிற்சி, குடும்பம், எவ்வாறு தீயை அணைக்கிறார்கள் என்பதை சுற்றி நகர்கிறது படம்.
இந்த குழுவின் வேலை காட்டுத்தீ பரவும் போது ப்ளான் பண்ணி தடுத்து நிறுத்துவது. உதாரணமாக பரவும் வழியில் உள்ள மரங்களை வெட்டி தீ பரவாமல் தடுப்பது .
ஒரு காட்டுத்தீ எதிர்பாராத விதமாக பரவி ஒரு ஊரை அழித்து விடும் அளவிற்கு மிரட்டுகிறது. இதனை அணைக்க நம்ம குழு செல்கிறது. தீயை அணைப்பதில் வெற்றி பெற்றார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
பெரிய திருப்பங்கள் இல்லாமல் மெதுவாக சென்றாலும் கடைசி 30 நிமிடங்கள் அருமை .
ரொம்பவே சோகமான க்ளைமேக்ஸ் , அழ வைச்சுட்டானுக.
நல்லா வித்தியாசமான படம் கண்டிப்பாக பாருங்கள் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக