ஒரு வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சரணடையும் ஒருத்தனை 22 மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு ஃப்ளைட்டில் பத்திரமாக ஏற்றி அனுப்ப வேண்டியவேலை ஒரு குழுவிற்கு கொடுக்கப்படுகிறது.
அவர்கள் Mission ஐ வெற்றிகரமாக முடித்தார்களா என்பது படம்.
IMDb 6.1
Tamil dub ✅
OTT Lionsgate
அமெரிக்காவுக்கு வெளியே நடத்தப்படும் ரகசிய ஆப்பரேஷன்களை நடத்தும் குழுவின் தலைவர் Silva (Mark Wahlberg) . இன்னொரு முக்கிய பொறுப்பில் இருப்பவர் Alice (TWD புகழ் Maggie)
படம் நடக்கும் நாட்டின் அமெரிக்க தூதரகத்தில் ஒரு லோக்கல் போலீஸ் (Iko Owais) சரணடைகிறான். அவன் அணு ஆயுதங்கள் பற்றிய தகவல்கள் தெரியும் என்றும் தன்னை காப்பாற்றி அமெரிக்க குடியுரிமை கொடுத்தால் அணுஆயுதங்கள் பற்றிய தகவல்களை கூறுவேன் என்கிறான்.
ஹூரோ &Co இவனை விமானத்தில் ஏற்றி கிளப்புகிறார்கள். ஆனா லோக்கல் குரூப் எப்படியாவது சரணடைந்தவனை போட்டுத்தள்ள துரத்துகிறது. தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
இந்த படம் எவ்வளவு பரபரப்பா போகனும்? இந்த 22 மைல் போக வேண்டிய தேவை வரும் போது படம் 1 மணிநேரத்துக்கு மேல ஓடி இருக்கிறது.
ஹீரோ பேசுறார் பேசுறார் பேசிக்கிட்டே இருக்காரு. அதுவும் தமிழ் டப்ல சல சலனு ரொம்பவே எரிச்சலா வருது.
Iko Owais ரோல் கொஞ்சம் பரவாயில்லை 2 சண்டை நல்லா இருக்கு.
சேஸிங் மற்றும் ஆக்சன் காட்சிகள் ரொம்ப interesting ஆக இல்லை. அதிலும் டீமில் ஒருத்தர் அடிபட்ட நிலையில் அவரிடம் தற்கொலை படை போல கையில் பாம் கொடுத்துட்டு போவது எல்லாம் டூ மச்.
என்க்கு அவ்வளவா பிடிக்கல.. ஆவரேஜான ஒரு ஆக்சன் படம் .
கருத்துகள்
கருத்துரையிடுக