பக்காவான ஒரு ரோட் ட்ரிப் த்ரில்லர் மூவி. படத்தோட ஐடியா கிட்டத்தட்ட Spielberg ன் Duel படம் மாதிரி தான். ஒரு பெரிய ட்ரக் காரில் போகும் ஹீரோ & Co வை கொல்ல வருது . அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் கதை.
IMDb 6.6
Tamil dub ❌
OTT ❌
Lewis (Paul Walker) வேறு மாநிலத்தில் படிக்கும் தனது நண்பியை கூப்பிட ரோட் ட்ரிப் போகிறார்.
போற வழியில் தனது சகோதரன் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளதை கேள்விப்பட்டு அவனையும் மீட்கிறார்.
இரண்டு பேரும் காரில் போகும் வழியில் போரடிக்குது என்று காரில் உள்ள பொது மக்கள் உபயோகப்படுத்தும் Radio மூலம் ஒருத்தன் கூட பேசுறாங்க.
Lewis பெண் குரலில் பேசி அவனை தாங்கள் தங்கி இருக்கும் மோட்டலின் ரூமுக்கு பக்கத்து ரூமுக்கு வருமாறு செய்து ஏமாற்றுகிறார்கள்.
ஆனால் அவனோ பெரிய சைக்கோவாக இருக்க.. பக்கத்து ரூமில் இருந்தவனை கொடூரமாக தாக்கிவிட்டு இவர்களை மோப்பம் பிடித்து துரத்த ஆரம்பிக்கிறான். இவனிடம் இருந்து மூவரும் தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
படம் முழுவதும் சேஸிங் தான். கடைசியாக மோட்டல் ரூம் க்ளைமாக்ஸ் நல்ல பரபரப்பு.
வில்லனை கடைசி வரைக்கும் காட்ட மாட்டார்கள்.கடைசி வரைக்கு குரல் மட்டும் வச்சு நகர்த்தி இருப்பாங்க.
Paul Walker டீசண்ட்டான காலேஜ் பையன் ரோல், அவரது தம்பியாக வருபவர் கொஞ்சம் காமெடிக்கு உதவுகிறார். ஹீரோயின் அழகாக வந்து போகிறார்.
ரொம்ப லாஜிக் எல்லாம் பாக்காம பரபரனு ஒரு த்ரில்லர் படம் பாக்கனும் என்றால் தாராளமாக பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக