இது ஒரு Sci Fi ஹாரர்படம்..
படம் நடப்பது 2047 - ஆம் வருடத்தில்.
IMDb 6.6
Tamil dub ❌
Available @primevideo
7 வருடங்களுக்கு முன்னாள் காணாமல் போன ஒரு Spaceship ல் இருந்து திடீர் என சிக்னல் வர , என்ன ஆனது என்று கண்டுபிடிக்க செல்லும் குழுவை பற்றிய படம்.
Event Horizon என்பது அந்த காணாமல் போன விண்வெளி கப்பலின் பெயர். அது ஒரு டெஸ்ட் ப்ராஜெக்ட் என்ற ரகசியத்தை சொல்கிறார் அதை உருவாக்கிய விஞ்ஞானி.
அந்த விஞ்ஞானி, கேப்டன் மற்றும் அவரது குழுவினர்கள் நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் சிக்னல் வந்த இடத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.
இந்த குழு அந்த விண்வெளி கப்பலுக்கு ஒரு வழியா போய் சேருகிறார்கள்.உள்ளே யாருமே இல்லாத நிலையில் அங்க பல மர்மமான கொடூரமான சம்பவங்கள் நடக்குது.
இதிலிருந்து யாரு எல்லாம் தப்பிச்சு வநதாங்கனு படத்தில் பாருங்கள்.
உள்ள இருந்தவங்க என்ன ஆனார்கள் என்று சஸ்பென்ஸ்ஸை மெயின்டெய்ன் பண்ணிய விதம் நல்லா இருந்தது.
சில இடங்களில் பயமுறுத்தியது, சில இடங்களில் நம்மளே என்ன ஆகும் என்று கண்டுபிடித்து விடலாம்.
கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக