முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Virus: 32

Shudder - ல் வெளிவந்துள்ள ஒரு Spanish ஹாரர் ஜாம்பி சர்வைவல் படம் இது.  IMDb 5.5 Tamil dub ❌ இதுல வர்ற ஜாம்பிகள் ஒரு அட்டாக் பணணுச்சுனா மறுபடியும் அட்டாக் பண்ண 32 நொடிகள் எடுத்துக் கொள்ளும்.  ஒரு பாழடைந்த பில்டிங்கில் மாட்டிக்கொண்ட தாயும் மகளும் தப்பித்தார்களா என்பது தான் படம்.‌ ஹீரோயின் ஒரு மூடப்பட்ட பாழடைந்த க்ளப்பில் வேலை செய்கிறார். மகளையும் ஒரு நாள் வேலை செய்யும் இடத்திற்கு கூட்டி வர வேண்டியது ஆகிறது. அந்த நேரத்தில் மனிதர்கள் ஜாம்பியாக மாறி உள்ளே நுழைய ஆரம்பிக்கிறார்கள்.  இதில் வரும் ஜாம்பிகள் கடித்து தின்பது எல்லாம் கிடையாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அதீத வன்முறை குணம் கொண்டு கண்ணில் பட்டவற்றை எல்லாம் அடித்து காலி பண்ணுகிறார்கள்.  இந்த நிலையில் ரவுண்ட்ஸ் போகும் ஹீரோயின் மகளை ஒரு ரூமில் விட்டு செல்ல இந்த ஜாம்பிகள் தாக்குதல் ஆரம்பமாகிறது.  பில்டிங் முழுவதும் ஜாம்பிகள் சூழ்ந்த நிலையில் மகள் இருக்கும் ரூமிற்கு வந்து மகளை காப்பாற்றினாரா என்பதை படத்தில் பாருங்கள்.  ஆவரேஜான ஜாம்பி ஹாரர் படம். 32 நொடிகள் கான்செப்ட்டை இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணி இருக்கலாம்.  பாழடைந்த க்ளப் செட்டப் படத்திற்

Singer - Minmini

 சின்ன சின்ன ஆசை பாடலில் அந்த குரல் அவ்வளவு அருமையாக இருக்கும்.  அந்த காலகட்டத்தில் பாடகர்களை பற்றி எல்லாம் அலட்டிக்கொண்டது இல்லை.  பாட்டு நல்லா இருக்கா ? இல்லையா ? அவ்வளவு தான் என் ரசனை.  வருடங்கள் செல்ல செல்ல யார் இந்த பாடலை பாடி இருப்பார்கள் என்று யோசிக்க தொடங்கினேன்.  அப்படி தொடங்கியதும் உடனே தோன்றிய பாடல் சின்ன சின்ன ஆசை.  பாடியவர் மின்மினி .  அந்த பாடல் கேட்க அவ்வளவு துள்ளல் மற்றும் இனிமையாக இருக்கும். இசை முக்கியம் என்றாலும் அந்த பாடலில் மின்மினி அவர்களின் குரல் ரொம்பவே முக்கியமான ஒன்று.  அதன் பின்பு பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.  அதற்கு அப்புறம் பாடிய சில பாடல்கள் எனக்கு தெரியும் .  பார்க்காதே - ஜென்டில்மேன் பச்சைக்கிளி - கிழக்கு சீமையிலே  எடுடா அந்த - புதிய மன்னர்கள்  நேற்று சின்ன சின்ன ஆசை பாடல் கேட்கும் சந்தர்ப்பம் அமைத்தது.  மறுபடியும் இவரு பாடிய பாடல்கள் என்ன என்ன ? இவ்வளவு திறமையான ஒரு பாடகி  ஏன் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாரா ? இல்லை வேறு பிரச்சினையா என தெரிந்து கொள்ள நம்ம Google ஐ கேட்டேன்.  அவருடைய பேட்டியில் தன்னுடைய குரல் போய்விட்டது 😱 என்று சொல்லி இருக்கிற

Green Room - 2005

Green Room Tamil Review  A24 ல இருந்து வந்த இன்னொரு Horror Thriller  4 பேர் கொண்ட Music Band  ஒரு பாரில் நடக்கும் கொலையை தெரியாத்தனமாக பார்த்து விடுகிறார்கள் .  கொலைக்கு காரணமானவர்கள இவர்களை வெளியே விட்டால் பிரச்சினை ஆகும் என போட்டுத்தள்ள முயற்சிக்கிறார்கள்.  யாரு ஜெயிச்சா என்பது ரத்தக்களரியான படம்.  ஒரே பில்டிங்கில் நடக்கும் படம். சாதாரண கதை தான் ஆனால் நல்ல ஸ்கிரீன் ப்ளே.  கண்டிப்பாக பார்க்கலாம்👍👍.செமயான ஒரு ஹாரர் திரில்லர் 🔥🔥

The Lincoln Lawyer - 2011

 நல்ல ஒரு கோர்ட் ரூம் டிராமா திரில்லர்.  வக்கீலான ஹீரோவை  நல்லவன் போல நடிக்கும் அவரது க்ளையடண்ட்டான ஆன வில்லன் ஒரு கேஸில் எக்குத்தப்பாக மாட்டி விடுகிறான்.  அதிலிருந்து எப்படி ஹீரோ தப்பித்தான் என்பது விறுவிறுப்பான படம்.  Mick ஒரு சின்ன வக்கீல். கிடைக்கிற சின்ன சின்ன கேஸ் எல்லாம் எடுத்து நெறய பேரை வெளியே கொண்டு வருகிறார் அல்லது தண்டனையை குறைக்கிறார்.  ஒரு நாள் பெண் ஒருத்தி தாக்கப்பட்ட வழக்கில் ஒரு பெரிய பணக்கார இளைஞனை காப்பாற்றும் கேஸ் இவனிடம் வருகிறது.  ஹீரோவும் கேஸை எடுத்துக்கொண்டு வாதாட ஆரம்பிக்கிறான். ஆனால் போக போக அவன் க்ளையண்ட் சாதாரண ஆள் கிடையாது இதற்கு முன்னாள் பல குற்றங்களை செய்து நேக்காக தப்பித்து இருக்கிறான் என்று.  ஆனால் ஒரு க்ளைண்ட் செய்த குற்றங்களை வெளியே சொல்வது சட்டப்படி குற்றமாகும்.(Client - Attorney privilege) . அதனால் இதை பற்றி வெளியே சொல்ல முடியாது. இந்த சூழ்நிலையில் எப்படி ஹீரோ சமாளித்தார்.‌ வில்லனுக்கு எப்படி தண்டனை வாங்கி தந்தாரா?  என்பதை படத்தில் பாருங்கள் ‌‌ . படத்தில் நல்ல ஸ்கிரீன் ப்ளே.. போரடிக்காமல் நன்றாக நகர்கிறது படம.  வக்கீலாக Matthew McConaughey  நடித்து

The Invisible Man - 2020

தரமான Sci Fi , Horror படம். கொடுமைப்படுத்தும் ஒரு விஞ்ஞானியான கணவரிடம் இருந்து தப்பித்து வருகிறார் ஹீரோயின்.  IMDb 7.1 Tamil dub ❌ OTT ❌ கணவன் தற்கொலை செய்து இறந்து விடுகிறான். செத்தாலும் விட மாட்டேன் என விரட்டுகிறான்.எப்படி என்று படத்தில் பாருங்கள்.  Optics துறையில் வல்லவரான ஒரு சைக்கோ விஞ்ஞானியின் மனைவி (Cecilia - Elizabeth Moss). அவனிடமிருந்து ஒரு நாள் தப்பித்து நண்பரின் வீட்டில் அடைக்கலம் ஆகிறார். சில நாட்களில் கணவன் தற்கொலை செய்து இறந்து விட்டான் என செய்தி வர நிம்மதி அடைகிறாள்.  ஆனால் நிம்மதி கொஞ்ச நாள் கூட இல்லாமல் தனது கணவன் இவளை பின்தொடர்ந்து வருவது போல தோன்றுகிறது.  சிறிது நாளில் பின்தொடர்வது போல தோன்றுவது வன்முறையாக மாறி அவளைச் சுற்றி இருக்கும் சில பேர் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஆனால் யார் தாக்குகிறார்கள் என்பது கண்ணுக்கு தெரியவில்லை.  கணவன் இறந்தது உண்மை தானா  ? யார் இவளை பின்தொடர்ந்து வருவது ? என்பதை படத்தில் பாருங்கள்.  படத்தின் ஆரம்ப காட்சிகள் மிகவும் அருமை. நல்ல சஸ்பென்ஸ் உடன் படம் நகர்கிறது.  சில காட்சிகள் நம்மளே இதுக்கு தான் வைக்கிறாங்க என்பதை கண்டுபிடித்து விடலாம். 

You Won't Be Alone - 2022

ஒரு வித்தியாசமான ஸ்லோவான ஹாரர் படம்.  ஒரு சூனியக்காரி கொஞ்சம் கொஞ்சமாக மனித உணர்வுகளை புரிந்து கொள்வதைப் பற்றிய படம் இது.  நிறைய ரத்தக்களரி + Sexual சீன்ஸ் இருக்கு.  So not for everyone ❌ 19 வது நூற்றாண்டில் ஒரு கிராமத்தில் குழந்தையை அபகரிக்க வருகிறாள் ஒரு சூனியக்காரி . குழந்தையின் அம்மா 16 வயசுக்கு அப்புறம் நீ இவளை எடுத்துக்கோ என டீல் போட்டு குழந்தையை கோவில் போல் உள்ள மலைப்பகுதியில் யார் கண்ணிலும் படாமல் வளர்த்து வருகிறாள்.  ஆனால் 16 வயது ஆனதும் சூனியக்காரி வந்து இந்த பொண்ணை கூட்டிட்டு போய் சூனியக்காரியா ஆக்கி விட்டுவிடுகிறாள்.  இந்த சூனியக்காரி நினைத்தால் ஒரு ஆளை போட்டுததள்ளி விட்டு அவர்கள் போலவே மாறிவிடலாம்.  இந்த புது சூனியக்காரி,  பெண், இளைஞன் என வகை வகையாக உருமாறி மனித உணர்வுகளை தெரிந்து கொள்வது தான் படம்.  இந்த உருமாறும் காட்சிகள் கொடூரமா இருக்கும்.  Witch படங்களில் இது ஒரு வித்தியாசமான முயற்சி. படம் மெதுவாக தான் போகும் பொறுமை வேண்டும். ரொம்ப மியூஸிக் வைச்சு பயமுறுத்தும் காட்சிகள் எல்லாம் கிடையாது.  எனக்கு பிடித்து இருந்தது.வித்தியாசமான ஹாரர் படம் பார்க்க விரும்பும் நண்பர்கள் பா

Joy Ride - 2001

பக்காவான ஒரு ரோட் ட்ரிப் த்ரில்லர் மூவி. படத்தோட ஐடியா கிட்டத்தட்ட Spielberg ன் Duel படம் மாதிரி தான். ஒரு பெரிய ட்ரக் காரில் போகும் ஹீரோ & Co வை கொல்ல வருது . அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் கதை.  IMDb 6.6 Tamil dub ❌ OTT ❌ Lewis (Paul Walker) வேறு மாநிலத்தில் படிக்கும்  தனது நண்பியை கூப்பிட ரோட் ட்ரிப் போகிறார்.  போற வழியில் தனது சகோதரன் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளதை கேள்விப்பட்டு அவனையும் மீட்கிறார்.  இரண்டு பேரும் காரில் போகும் வழியில் போரடிக்குது என்று காரில் உள்ள பொது மக்கள் உபயோகப்படுத்தும் Radio மூலம் ஒருத்தன் கூட பேசுறாங்க. Lewis பெண் குரலில் பேசி அவனை தாங்கள் தங்கி இருக்கும் மோட்டலின் ரூமுக்கு பக்கத்து ரூமுக்கு வருமாறு செய்து ஏமாற்றுகிறார்கள்.  ஆனால் அவனோ பெரிய சைக்கோவாக இருக்க.. பக்கத்து ரூமில் இருந்தவனை கொடூரமாக தாக்கிவிட்டு இவர்களை மோப்பம் பிடித்து துரத்த ஆரம்பிக்கிறான்.  இவனிடம் இருந்து மூவரும் தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.  படம் முழுவதும் சேஸிங் தான். கடைசியாக மோட்டல் ரூம் க்ளைமாக்ஸ் நல்ல பரபரப்பு.  வில்லனை கடைசி வரைக்கும் காட்ட மாட்டார்கள்.கடைச

Mile 22 - 2018

ஒரு வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சரணடையும் ஒருத்தனை 22 மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு ஃப்ளைட்டில் பத்திரமாக ஏற்றி அனுப்ப வேண்டியவேலை ஒரு குழுவிற்கு கொடுக்கப்படுகிறது.  அவர்கள் Mission ஐ வெற்றிகரமாக முடித்தார்களா என்பது படம்.  IMDb 6.1  Tamil dub ✅ OTT Lionsgate அமெரிக்காவுக்கு வெளியே நடத்தப்படும் ரகசிய ஆப்பரேஷன்களை நடத்தும் குழுவின் தலைவர் Silva (Mark Wahlberg) . இன்னொரு முக்கிய பொறுப்பில் இருப்பவர் Alice (TWD புகழ் Maggie)  படம் நடக்கும் நாட்டின் அமெரிக்க தூதரகத்தில் ஒரு லோக்கல் போலீஸ் (Iko Owais) சரணடைகிறான். அவன் அணு ஆயுதங்கள் பற்றிய தகவல்கள் தெரியும் என்றும் தன்னை காப்பாற்றி அமெரிக்க குடியுரிமை கொடுத்தால் அணுஆயுதங்கள் பற்றிய தகவல்களை கூறுவேன் என்கிறான்.  ஹூரோ &Co இவனை விமானத்தில் ஏற்றி கிளப்புகிறார்கள். ஆனா லோக்கல் குரூப் எப்படியாவது சரணடைந்தவனை போட்டுத்தள்ள துரத்துகிறது. தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.  இந்த படம் எவ்வளவு பரபரப்பா போகனும்? இந்த 22 மைல் போக வேண்டிய தேவை வரும் போது படம் 1 மணிநேரத்துக்கு மேல ஓடி இருக்கிறது.  ஹீரோ பேசுறார் பேசுறார் பேசிக்கிட்டே இரு

Palkova

பால்கோவாவை பற்றிய த்ரெட்..  கொஞ்ச நாளைக்கு முன்னாடி வத்தலகுண்டு பக்கத்தில ஒரு சாலையோர பெரிய உணவகத்தில் சாப்பிட நிறுத்தினோம்.  நண்பர்கள் பால்கோவா கேட்டு இருந்தார்கள் சில காரணங்களால் ஊரில் இருந்து வாங்க முடியல.  அங்க ஒருத்தர் பால்கோவா வித்துட்டு இருந்தாரு.   பசங்க பால்கோவா வாங்கியே ஆகனும்னு நின்னானுக.  திருவில்லிபுத்தூர்காரன் நீ தான் வந்து செக் பண்ணி வாங்கி தரணும்னு கண்டிஷன் வேற.  எனக்கு தெரிந்து பால்கோவா வில் கலப்படம் செய்ய முடியாது. ஆனால் நம்ம ஆட்கள் தான் எதிலும் கலப்படம் செய்யும் மூளைக்காரர்கள் ஆச்சே..  நான் போய் ரேட்டு என்ன என்று கேட்டேன். அவர் கால் கிலோ 80 ரூபாய் என்றார். ரேட் கூட இருக்கே என்றேன் அப்பவாச்சும் உஷாராகம சார் ஒரிஜினல் திருவில்லிபுத்தூர் பால்கோவா சார் சாம்பிள் பாருங்க எனக் கொடுத்தார். இதுக்கு தான வெயிட்டிங் என்று வாங்கி வாயில் போட்ட உடனே தெரிந்து விட்டது  ரொம்ப மட்டமான குவாலிட்டி.. .நண்பர்களிடம் ரொம்ப இனிப்பா இருக்கு ஆசைக்கு ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். உடனே கடைக்காரருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. பால்கோவா இனிப்பா இல்லாம வேற எப்படி இருக

The Swordsman - 2020

இன்னொரு கொரியன் வரலாற்று திரைப்படம். ரிடையர்டான வாள்வீச்சில் கிங்கான ஹீரோ மகளுடன் காட்டுக்குள் அமைதியாக வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில் மகள் கடத்தப்பட பழைய பன்னீர் செல்வமாக மகளை மீட்க கிளம்புகிறார்.  IMDb 6.8 Tamil dub ❌ OTT ❌ கண்பார்வையை இழந்து வரும் ஹீரோ சிகிச்சைக்காக நகரத்துக்குள் வர நேரிடுகிறது.  அடுத்து நடக்கும் சில சம்பவங்களால் அவரின் மகள் மனிதர்களை அடிமையாக்கி விற்கும் பவர்புல்லான ஒரு கூட்டத்தில் சிக்கிக் கொள்கிறாள்‌.  கண்பார்வை குறைந்து கொண்டே வர இருக்கும் சொற்ப நேரத்தில் மிகப்பெரிய படைகளை சமாளித்து மகளை மீட்டானா என்பதை படத்தில் பாருங்கள். கதை ரொம்பவே சிம்பிளான ஆனால் செம் பவர்புல்லான கதை‌ . அருமையான திரைக்கதை படத்தை அழகாக நகர்த்தி செல்கிறது. முதல் பாதி முழுவதும் Plot செட் செய்யப்படுகிறது. இரண்டாவது பாதி பெரும்பாலும் ஆக்சன் சீக்குவன்ஸ் தான்.  வாள் சண்டை காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதுவும் துப்பாக்கியுடன் சண்டைக்கு வரும் வீரர்களுடன் வாள் சண்டையிடும் காட்சிகள் சிறப்பு. லாஜிக்கை யோசிக்க விடாமல் எடுத்த விதம் சிறப்பு.  ஹீரோவாக வருபவர் கலக்கி இருக்கிறார். அசால்ட்டாக வாளை க

Eye In The Sky - 2015

நம்ம சந்தில் இந்த படத்தை யாரோ ஒருவர் பரிந்துரை செய்து இருந்தார். அருமையான படம்.  IMDb 7.3 Tamil dub ❌ Available @ Amazonprimein மிலிட்டரி தாக்குதல் நடைபெறும் போது தெரியாத்தனமாக அந்த ஏரியாவிற்குள் வரும் சிறுமியால் ஏற்படும் குழப்பம் தான் படம். கென்யாவில் ஒரு வீட்டில் பல வருடங்களாக தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் சந்திப்பு நடக்கிறது என்பதை ராணுவம் கண்டுபிடிக்கிறது.  இந்த ராணுவ கூட்டணியில் 3 நாடுகள் உள்ளன கென்யா, இங்கிலாந்து & அமெரிக்கா. Drone மூலமாக அந்த வீட்டை அழித்து விடலாம் என எல்லாவற்றையும் ரெடி பண்ண அப்போது ஒரு பிரட் விற்கும் சிறுமி அந்த வீட்டிற்கு அருகில் கடை போடுகிறார்.  இந்நிலையில் தாக்குதல் நடத்தினால் அந்த சிறுமி இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனை எப்படி மனிதாபிமான , சட்ட ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக எதிர்கொண்டு Mission ஐ முடித்தார்கள் என்பது தான் படம்.  சும்மா சொல்லக்கூடாது படம் பரபரவென செம் Gripping. ஒரு டென்ஷன் படம் முழுவதும் இருக்கிறது.  Drone Strike என்றால் ஒரு ஏவுகணையை ஏவி விட்டு காலி பண்ணிட்டு போய்ட்டே இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா எத்தனை அரசுகள், அதிகாரிகள் இத

Confession Of Murder - 2022

கொரியன் சட்டப்படி 15 வருடத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் குற்றவாளியை அதுக்கு அப்புறம் எதுவும் செய்ய முடியாது என்பதை அடிப்படையாகக் கொண்டு வந்து உள்ள படம‌.  IMDb 7.0 Tamil dub ❌ OTT ❌ சீரியல் கில்லர்களுக்கும் தென் கொரியாவிறகும் என்ன தொடர்போ.. அடிக்கடி தரமான சீரியல் கில்லர் படங்கள் இவர்களிடம் இருந்து வரும்.  ஒரு நாள் சீரியல் கில்லர் பத்திரிகை கூட்டம் நடத்தி 15 வருஷங்களுக்கு முன்னாடி நடந்த 10 இளம்பெண்களை கொலை செய்தது நான் தான் என்கிறான். மேலும் அதை நிரூபிக்க அந்த கொலைகளை பற்றி டீடெய்லா  புக் போட்டு பெரிய அளவில் கல்லா கட்டுகிறான்.  இவன் தான் அந்த கில்லர் என்பதை நிருபிக்க அந்த வழக்குகளை விசாரித்த போலீஸ் அதிகாரியையும் உள்ளே இருக்கிறான்.  இவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் சொந்தக்காரர்கள் ஒரு குரூப்பாக இணைந்து சீரியல் கில்லரை போட்டுத்தள்ள முயற்சி செய்கிறார்கள்.  இதற்கு நடுவில் இன்னொருத்தன் நான் தான் அந்த கொலைகாரன் என்று வருகிறான். போலீஸ்காரர் யாரு தான்டா உண்மையான கொலைகாரன் என்பதே கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். கடைசில யாரு உண்மையான கொலைகாரன் என்பதை படத்தில் பாருங்கள்.  நல்ல புதுமையான க

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

Event Horizon - 1997

இது ஒரு Sci Fi ஹாரர்படம்.. படம் நடப்பது  2047 - ஆம் வருடத்தில்.  IMDb 6.6 Tamil dub ❌  Available @primevideo 7 வருடங்களுக்கு முன்னாள் காணாமல் போன ஒரு Spaceship ல் இருந்து திடீர் என சிக்னல் வர ,  என்ன ஆனது என்று கண்டுபிடிக்க செல்லும் குழுவை பற்றிய படம்.  Event Horizon என்பது அந்த காணாமல் போன விண்வெளி கப்பலின் பெயர். அது ஒரு டெஸ்ட் ப்ராஜெக்ட் என்ற ரகசியத்தை சொல்கிறார் அதை உருவாக்கிய விஞ்ஞானி.  அந்த விஞ்ஞானி, கேப்டன் மற்றும் அவரது குழுவினர்கள் நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் சிக்னல் வந்த இடத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.  இந்த குழு அந்த விண்வெளி கப்பலுக்கு ஒரு வழியா போய் சேருகிறார்கள்.உள்ளே யாருமே இல்லாத நிலையில் அங்க பல மர்மமான கொடூரமான சம்பவங்கள் நடக்குது.  இதிலிருந்து யாரு எல்லாம் தப்பிச்சு வநதாங்கனு படத்தில் பாருங்கள்.  உள்ள இருந்தவங்க என்ன ஆனார்கள் என்று சஸ்பென்ஸ்ஸை மெயின்டெய்ன் பண்ணிய விதம் நல்லா இருந்தது.  சில இடங்களில் பயமுறுத்தியது, சில இடங்களில் நம்மளே என்ன ஆகும் என்று கண்டுபிடித்து விடலாம். கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம் 👍  ‌

State Of Programming in Tamil

ஒரு ஹிந்தி & தமிழ் சண்டை ட்வீட்ல ஹிந்தில ப்ரோக்ராம் எழுத முடியுமானு கிழிச்சுட்டு இருந்தாரு. சரி மற்ற மொழிகளை விட்டு விடுவோம். கணிப்பொறியில் தமிழ் எந்த அளவு இருக்கு என்று பாக்கலாம். கணிப்பொறியில் தமிழ் என்றால் தமிழ் வெப்சைட்டுகள், தமிழ் மொழியில் ஆஃப்கள் தமிழக அரசு தகவல்கள் கேட்கும் ஃபார்ம்கள் தமிழில் இருப்பது பற்றி கிடையாது. 1. ஒரு நல்ல தமிழ் தெரிந்த பையனுக்கு ஆனால் ஆங்கிலத்தை புரிந்து கொள்ள கஷ்டப்படும் ஒரு மாணவனுக்கு என்னால் தமிழில் ப்ரோகிராமிங் சொல்லித்தர இயலுமா ?  உதாரணமாக:   If (i>5) {   i++  }  என்பதை தமிழில்  ஆனால் (ஐ > 5) {   ஐ++  }  மேலும்: else if -> இல்லை ஆனால்  என எழுதி கம்பைல் பண்ணி ரன் பண்ண முடியுமா ?  என்னுடைய பதில் முடியும் என்பது தான்.  இதற்கு ஒருவர் மெனக்கெட்டு "எழில்" என்ற ப்ரோக்ராமிங் லாங்குவேஜயை Python ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார் இது மாதிரி விஷயங்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் நடைபெற்றதா ? அரசு அலுவலகங்கள் , பிரவுசிங் சென்டர்கள் தவிர்த்து வேறு எங்காவது தமிழ் கீ போர்டு பார்த்து இருக்கீங்களா ? 2010 களில் நான் வேலை பார்த்த டச்சு புரோஜக்ட்டி

The Witch : Part 1- The Subversion

The Tiger பட டைரக்டர் மற்றும் I saw the devil படத்தின் Writer ஆன Park Hoon - Jung ன் மறறொரு தரமான படம்.  நல்ல ஒரு மர்மம் கலந்த கொரியன் ஆக்சன் படம். வன்முறைக் காட்சிகள் ரொம்பவே அதிகம்.  IMDb 7.2 Tamil dub ❌ Available @Primevideoin படம் ஆரம்பமே குழந்தைகளை கொல்வது போல கொடூரமான காட்சிகளுடன் தொடங்குகிறது. அதில் ஒரு சிறுமி மட்டும் தப்பித்து குத்துயிரும் கொலை உயிருமாக பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் விழுந்து மயங்குகிறார்.  படம் 10 வருடம் முன்னோக்கி செல்கிறது. அதே வீட்டில் வளர்ப்பு மகளாக வளர்க்கிறார் அந்த பெண். அழகான குடும்பம், நண்பி என போய்க்கொண்டு இருக்கும் வாழ்க்கையில் பணப்பிரச்சினை காரணமாக ஒரு டிவி ப்ரோக்ராம்மில் கலந்து கொள்கிறார்.  அதற்கு அப்புறம இரண்டு குரூப்புகள் இவளை சுற்றி சுற்றி வந்து தொல்லை தருகிறார்கள். இவளைச் சுற்றி பல மர்மங்கள் இருக்கிறது என்று தெரிகின்றது.  யார் இந்த பெண்? எதற்காக பல குரூப்புகளால் தேடப்படுகிறார், அவரைச் சுற்றி உள்ள மர்மங்கள் என்ன என்பதை பல எதிர்பாராத ட்விஸ்களுடன் ரத்தக்களரியாக சொல்கிறது படம்.  படம் முதல் ஒரு மணி நேரம் மெதுவாக செல்கிறது. ஒவ்வொரு கேரக்டருக்கும் Solid

The Outfit - 2022

1956 ஆம் வருடத்தில் ஒரு டெய்லர் கடையில் ஒரே இரவில் நடக்கும் Brilliant ஆன க்ரைம் டிராமா.  IMDb 7.4 Tamil dub ❌ OT T ❌ இரண்டு கேங்குகளுக்குள் நடக்கும் பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார் ஒரு திறமையான டெய்லர். எப்படி தப்பிக்கிறார் என்பதை தரமான திரைக்கதை மூலம் சொல்லும் படம்.  Leonard ( Mark Rylance ) லண்டனில் இருந்து சிக்காகோவில் புலம்பெயர்ந்த ஒரு திறமையான டெய்லர். இவரின் கடையில் அசிஸ்டென்ட்டாக ஒரு பெண்ணை வேலைக்கு வைத்து உள்ளார். இவரின் அமைதியான சுபாவம் மற்றும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாத குணத்தால் அந்த ஏரியாவில் உள்ள ஒரு கேங் பண பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்ய இவரது கடையை உபயோகித்து வருகிறது.  ஒரு நாள் இரவு அந்த கேங் தலைவனின் மகன் எதிர் கேங்குடன் நடத்த சண்டையில் குண்டடிப்பட்டு அவனது கேங் ஆள்  ஒருவனுடன் கடைக்குள் தஞ்சம் அடைகிறார்கள். அதற்கு அப்புறம் நடக்கும் ஒரு சம்பவம் பல சம்பவங்களை Trigger செய்து விடுகிறது. இதனால் டெய்லர் + அவரது அஸிஸ்டன்ட்  உயிருக்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.  இதை எப்படி சமாளித்தார் என்பதை படத்தில் பாருங்கள்.  இயக்கம் + திரைக்கதை இணைந்து எழுதி இரு

One Cut Of The Dead - 2017

One Cut Of The Dead - Tamil Review  இது ஒரு ஜப்பானிய low budget ஜாம்பி ஹாரர் + காமெடி படம்.  IMDb 7.6 Tamil dub ❌ OTT ❌ ஜாம்பி பட ஷீட்டிங் எடுக்க பாழடைந்த பங்களாக்கு போகும் குரூப் உண்மையான ஜாம்பிகள் கிட்ட சிக்குற கதை தான்.  என்னடா பழைய கதையா இருக்குனு நினைக்காம பாருங்க செம ட்விஸ்ட் இருக்கு.  பாழடைந்த பில்டிங்கு சூட்டிங் போறாங்க ஒரு குரூப். அங்க போனப்பறம் தான் தெரியுது அது மனிதர்களை வச்சு கொடூரமான ஆராய்ச்சி பண்ணிய பழைய கட்டடம் என்று .  கூட வந்த குழுவில் உள்ளவர்கள் ஒவ்வொருத்தராக ஜாம்பியாக மாற கடைசியில் ஹீரோயின் தப்பிப்பது தான் படம்.  இந்த கதை அரை மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. அதுக்கு அப்புறம் வர்ற ஒரு மணி நேரம் செமயா இருக்கும்.  அதுவும் கடைசி அரைமணி நேரம் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.  கண்டிப்பாக பாருங்கள் 👍👍 Watch Trailer: 

2001: A Space Odyssey - 1968

 பிரபல இயக்குநர் Stanley Kubrick இயக்கத்தில் 1968 ல் வெளிவந்த ஒரு Sci Fi , Adventure படம் இது.  படத்தோட தரமான மேக்கிங்காகவே படத்தை பார்க்கலாம்.  IMDb 8.3 Tamil dub ❌ 91 Of Top 250 movies படத்தின் கதை மூன்று லேயர்களாக உள்ளது. படம் ஆப்பிரிக்காவில் ஒரு வறண்ட பிரதேசத்தில் ஆரம்பிக்கிறது. அங்குள்ள மனித குரங்குகள் கூட்டத்தின் வாழ்க்கையை காட்டுகிறது. அங்கு திடீரென ஒரு கருப்பு பலகை மண்ணுக்குள் இருந்து வருது. அதை இந்த குரங்கு கூட்டம் ஆச்சர்யமாக தொட்டுப் பார்க்கிறது.  அங்கு நடக்கும் ஒரு முக்கியமான  சம்பவத்துடன் அந்த பகுதி கதை நிறைவடைகிறது.  அடுத்த பகுதி நிலாவில் உள்ள மனித காலனியில் நடக்கும் கதை.  அங்கும் ஒரு முக்கியமான சம்பவத்துடன் முடிகிறது.  மூன்றாவது ஜூபிடர் கிரகத்தை நோக்கி பயணிக்கும் ஒரு குழுவை பற்றியது.  இநதக்குவை வழி நடத்துவது HAL 1000 எனப்படும் அதி நவீன சூப்பர் கம்ப்யூட்டர்.  இந்த மூன்று கதைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன ? இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை படத்தில் பாருங்கள்.  1967 ல இந்த மாதிரி யோசித்து இப்படி ஒரு படம் பண்ணி இருக்கிறார் என்பதை நினைக்கும் போதே பிரமிப்பு ஏற்படுகிறது.  என்ன

The Tiger - A Hunter's Tale - 2015

The Tiger - A Hunter's Tale - 2015 Korean Movie Tamil Review  இது ஒரு கொரியன் ஆக்சன், அட்வென்சர் படம்.  50+ வயதில் இருக்கும் திறமையான வேட்டைக்காரன் ஹீரோ. சில கசப்பான அனுபவங்களால் வேட்டையை விட்டு விட்டு மகனுடன் வாழ்ந்து வருகிறார்.  ஆனால் ஒரு புலி எவ்வாறு இவரை மறுபடியும் துப்பாக்கி தூக்க வைத்தது என்பது தான் படம். படத்தின் டைரக்டர்  Park Hoon-Jung. இவரின் முந்தைய படங்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம் I Saw The Devil.  Old Boy, Admiral போன்ற படங்களின் நாயகனான Choi Min Sik தான் ஹீரோ. நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.‌ படம் நடப்பது 1925 களில் ஜப்பான் ஆக்ரமிப்பு செய்துள்ள கொரியாவில். ஜப்பான் ராணுவ ஜெனரலுக்கு அந்த மலையில் உள்ள எல்லா புலிகளையும் அழிதது விட வேண்டும் என்ற வெறி.  இதற்காக அந்த ஏரியாவில் வசிக்கும் இன்னொரு வேட்டைக்காரனிடம் இந்த வேலை கொடுக்கப்படுகிறது. இவர்கள் எல்லா புலிகளையும் கொன்று விட்டாலும் உள்ளூர் மக்களால் Mountain Lord என அழைக்கப்படும் ஒரு புத்திசாலி மற்றும் ஆக்ரோஷமான  புலியை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  இன்னொரு பக்கம் மனைவி கொடூரமாக புலியால் கொல்லப்பட்

The Nameless Days - 2022

மாயன் காலண்டர் படி 20 வருஷத்துக்கு ஒருக்க 5 நாள் எந்த மாசத்துலயும் சேராதாம் அதுதான் Nameless days. இந்த டைம்ல மாயன் கடவுள்கள் வந்து மனிதர்களை வேட்டையாடும் என்ற கான்செப்டை வைத்து வந்திருக்கும் horror படம்.  IMDb - Not enough reviews Tamil dub ❌ மெக்ஸிகோவை சேர்ந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது சகோதரர் இருவரும் சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள்.  ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேரிடுகிறது. சகோதரர் அந்த ஏரியாவில் உள்ள ஹீரோயின் வீட்டில் காயமடைந்த நிலையில் தஞ்சமடைகிறார்.  இதற்கு நடுவில் ஒரு பேய் எல்லாத்தையும் வயித்த கிழிச்சு கொலலுது. இந்த பேயிடம் இருந்து தப்பித்து கர்ப்பிணி  அக்காவிடம் தம்பி சேர்ந்தாரா என்பது தான் படம். ரொம்ப பயம் வரல, சுமாரான படம். பேய் மெதுவா ஜாம்பி மாதிரி மெதுவா நகருது.  கான்செப்ட் நல்லா இருந்தது. இன்னும் கொஞ்சம் பரபரப்பா எடுத்து இருக்கலாம். 

Only The Brave - 2017

ஒரு தீயணைப்பு குழுவை பற்றிய உண்மைச் சம்பவங்களை தழவி எடுக்கப்பட்ட படம்.  குறிப்பாக 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு  சம்பவத்துடன் படம் முடிகிறது.  IMDb 7.6 Tamil dub ❌ OTT ❌ படம் ரொம்பவே நீளம் ஆனா கடைசில அழுக வைச்சுருவாங்க.  குழுவில் மொத்தம் 20 பேர் இருந்தாலும் இரண்டு பேரை சுற்றி நகர்கிறது.  ஒருவன் போதைக்கு பழக்கத்தில் இருந்து மீள முயற்சிக்கும் இளைஞன் தீயணைப்பு குழுவில் சேருகிறான்.  இன்னொருவர் அந்த குழுவின் தலைவர்.  இந்த குழுவின் பயிற்சி, குடும்பம், எவ்வாறு தீயை அணைக்கிறார்கள் என்பதை சுற்றி நகர்கிறது படம். இந்த குழுவின் வேலை காட்டுத்தீ பரவும் போது ப்ளான் பண்ணி தடுத்து நிறுத்துவது. உதாரணமாக பரவும் வழியில் உள்ள மரங்களை வெட்டி தீ பரவாமல் தடுப்பது ‌‌ .  ஒரு காட்டுத்தீ எதிர்பாராத விதமாக பரவி ஒரு ஊரை அழித்து விடும் அளவிற்கு மிரட்டுகிறது. இதனை அணைக்க நம்ம குழு செல்கிறது. தீயை அணைப்பதில் வெற்றி பெற்றார்களா என்பதை படத்தில் பாருங்கள்.  பெரிய திருப்பங்கள் இல்லாமல் மெதுவாக சென்றாலும் கடைசி 30 நிமிடங்கள் அருமை .  ரொம்பவே சோகமான க்ளைமேக்ஸ் , அழ வைச்சுட்டானுக.  நல்லா வித்தியாசமான படம் கண்டிப்பாக பாருங்கள் 👍