Korea வில் இருந்து வந்து இருக்கும் Pirates of the Caribbean வகையிலான படம்.
ஆக்சன், அட்வென்ட்சர் மற்றும் காமெடி கலந்த லோ பட்ஜெட் treasure hunt பற்றிய பொழுது போக்கு படம்.
IMDb 6.0
Tamil dub ❌
Available @Netflix
Watch with family ✅
ஸ்டோரி லைன் பழசு தான். ஒரு காலத்தில் அரசர் பதுக்கி வைத்த பொக்கிஷத்தை தேடிப் போகும் இரண்டு குரூப்பை பற்றிய கதை.
ஹீரோ ஒரு கொள்ளைக்காரன் , ஹீரோயின் ஒரு கடல் கொள்ளைக்காரி இருவரும் இணைந்து தங்கள் குழுவுடன் புதையலை தேடி கப்பலில் போகிறார்கள்.
இன்னொரு பக்கம் கொடூரமான ஒரு வீரர்கள் கொண்ட தளபதி அதே புதையலை தேடி கிளம்புறாரு.
யாருக்கு புதையல் கிடைத்தது என்பதை ஜாலியாக சொல்கிறது.
தெரிஞ்ச கதை, சீப்பான கிராபிக்ஸ் , நீளமான படம் என நிறைய பிரச்சினைகள் இருந்தாலும் ஜாலியாக ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியோடு படம் போகின்றது. ஆக்சன் சீக்குவென்ஸ் நல்லா இருக்கு.
நல்ல ஒரு பொழுதுபோக்கு படம். ஆபாச காட்சிகள் மற்றும் வன்முறை இல்லாததால் குடும்பத்துடன் தாரளமாக பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக