All My Friends Hate Me - 2022
30+ வயதில் இருக்கும் ஹீரோ பல வருடங்கள் கழித்து தன்னுடைய காலேஜில் கூட படிச்ச நண்பர்களை சந்திக்க ஒரு ஒதுக்கு புறமான பங்களாவுக்கு போகிறான். அங்கு நடக்கும் வித்தியாசமான சம்பவங்கள் தான் படம்.
பக்காவான ஹாரர் மெட்டீரியல் மாதிரி இருக்குல. ஆனா படம் டார்க் காமெடியாம். கடைசில காமெடியும் இருந்த மாதிரி தெரியலை ஹாரரும் இல்லை.
IMDb 6.3
Tamil dub ❌
OTT ❌
ஹீரோ ப்ரண்ட்ஸ் கூட ஒரு பெரிய பங்களாவில் பிறந்தநாள் கொண்டாட வந்து ஜாய்ன் பண்றான்.ஆனா இவன் நண்பர்கள் லோக்கல் பார்ல ஒருத்தனை ப்ரண்ட் பிடிச்சு கூட்டிட்டு வர்றானுக. அந்த புதுசா வந்தவன் தனது நண்பர்களை தனக்கு எதிராக திருப்புற மாதிரி தெரியுது ஹீரோவுக்கு.
உண்மையில் யாரு அவன்? இல்ல ஹீரோவோட மனப்பிராந்தியா என்பதை படத்தில் பாருங்கள்.
படம் ரொம்பவே ஸ்லோ + ரொம்ப பெரிய ட்விஸ்ட் , பயமுறுத்தும் காட்சிகள் இல்லை.
ஸ்கிரீன் ப்ளே வச்சு தான் படம் நகருது.
கருத்துகள்
கருத்துரையிடுக