1597 ல் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வார் படம்.
ஜப்பான் கொரியா மீது படை எடுக்குது. கடலில் ஒரு பகுதியை தாண்டி விட்டால் கொரியா சோலி முடிஞ்சது.
கொரிய தளபதி வசம் இருப்பது 12 கப்பல்கள், ஜப்பான் கடல்படை வசம் 300+ கப்பல்கள்.
எப்படி ஜப்பான் படையை தடுத்தார் என்பது தான் படம்.
2 மணி நேரம் ஓடக்கூடிய படம். முதல் ஒரு மணி நேரம் போரின் பிண்ணனி, இரண்டு பக்கமும் உள்ள அரசியல் என கதைக்கான அடித்தளம் மற்றும் போருக்கான பில்டப் கொடுக்கப்படுகிறது.
இரண்டாவது ஒரு மணி நேரம் முழுதும் கப்பல் மற்றும் கத்தி சண்டை தான்.
300 கப்பல் எங்க இருக்கு , 12 கப்பல் எங்க இருக்கு.. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழும் இல்லையா. அதை ஹீரோவான தளபதி சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி எப்படி ஃப்ளான் பண்ணி அட்டாக் பண்ணுறார் என்பதில் உள்ளது .
இந்த மாதிரி ஒரு போர் படம் நான் பார்த்தது இல்லை இது வரை.இரணடாவது பாதியில் எக்கச்சக்கமான Goosebumps moments இருக்கு.
கொரிய தளபதியாக கலக்கி இருப்பவர் Choi Min Sik அதாங்க Old Boy படத்தோட ஹீரோ.
படத்தின் இயக்குனர் War of the arrows என்னும் தரமான படத்தை கொடுத்தவர்.
முதல் ஒரு மணி நேரம் கொஞ்சம் மெதுவா போனாலும் இரண்டாவது ஒரு மணி நேரம் எல்லாத்தையும் சரி பணணிடுது.
Highly Recommended 🔥
கருத்துகள்
கருத்துரையிடுக