Death On The Nile Tamil Review அகதா கிறிஸ்டி நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் இது. நைல் நதியில் உல்லாசப் பயணம் போகும் ஒரு பெரிய படகில் பணக்கார பெண் ஒருவர் கொல்லப்படுகிறார் . யார் அந்த பெண்ணை கொன்றது என்பதை ஹீரோ கண்டுபிடிப்பது தான் படம். பெரிய பணக்கார பொண்ணு Linnet (Gal Gadot ❤️) அவளின் நெருங்கிய நண்பி Jackie (Emma Mackay) . Jackie ன் காதலன் Simon. ஒரு கட்டத்தில் Simon மற்றும் Linnet சேர்ந்து Jackie யை கழட்டி விட்டு விட்டு கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். Honeymoon க்கு சொந்தகாரர்கள் ப்ரண்ட்ஸ் என பெரிய கூட்டத்தை கிளப்பிக்கொண்டு ஒரு போட்டில் நைல் நதியில் ட்ரிப் போறாங்க. இதில் ஒரு கெஸ்ட் தான் ஹீரோ மற்றும் படத்தின் டைரக்டரான Kenneth Branagh டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் வருகிறார். நடுவே Jackie யும் போட்டில் புகுந்து இவர்களுக்கு குடைச்சல் கொடுக்கிறார். Boat ல இருக்குற பாதி பேருக்கு மேல் Linnet ஐ கொல்வதற்கு காரணம் இருக்குது. So யாரு கொலையாளி என்பதை படத்தில் பாருங்கள். படம் நல்லா இருக்கு. ஆனா ஏதோ மிஸ்ஸிங் . Linnet and Simon ஜோடியின் ரொமான்ஸ் அவ்வளவு எடுபடவில்லை.
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil