போன வாரம் washing machine வாங்க Show Room போனேன். ஓரளவு என்ன நமக்கு வேண்டும் என்ற ஐடியா இருந்தாலும் என்ன ப்ராண்ட் வாங்கலாம் என்பதில் கொஞ்சம் குழப்பம்.
ஏற்கனவே Direct Drive technology பத்தி கொஞ்சம் படிச்சுட்டு போய் இருந்தேன் . அவங்க காட்டுன DD model மற்றும் சேல்ஸ்மேன் சொன்ன விதம் எனக்கு கொஞ்சம் திருப்தியை கொடுத்தது.
அதனால் LG Front load with DD டெக்னாலஜி வாங்கியாச்சு. ஆனா சேல்ஸ்மேன் திரும்ப திரும்ப சொன்னது WiFi இருக்கு சார் நீங்க ஆஃபிஸ்ல இருந்தே கண்ட்ரோல் பண்ணலாம் என்று. எனக்கு இதில் அவ்வளவு உடன்பாடில்லை மற்றும் அவ்வளவு பிஸியும் இல்லை . நான் அவர்ட்ட சொன்னது வாஷிங்மெசின்க்கு எதுக்கு பாஸ் WiFi. ஆனால் நாங்கள் வாங்கிய மாடலில் WiFi இருந்தது.
அன்னிக்கு வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம் அதனால் வாங்கிட்டேன்.
2 நாள்ல வாஷிங்மெஷின் செட் அப் பண்ணி உபயோகிக்க ஆரம்பித்தாயிற்று. சரி சேல்ஸ்மேன் WiFi WiFi னு சொல்லிட்டே இருந்தாரேனு டிரை பண்ணினேன். எந்த அளவுக்கு உபயோகமா இருக்குனு பாக்கலாம்.
இனிமே வாங்குறவங்களுக்கு கொஞ்சம் ஐடியா கிடைக்கும் என்பதற்கு தான் இந்த போஸ்ட்.
LG ThinQ என்று ஒரு ஆஃப் ரெடி பண்ணிருக்காங்க.
Remote control option நமக்கு தேவையில்லை என்பதால் வேறு என்ன இருக்கு என்று பார்த்தேன்.
1. முதலில் ஆஃப்ல் கண்ணில் பட்டது Smart Diagnosis
இதன் மூலம் வாஷிங்மெஷினில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
Smart Diagnosis result:
ஏதாவது பிரச்சினை இருந்தால் கண்டிப்பாக இதில் காட்டிவிடும் Customer Support ல் சொல்வதற்கு ஈஸியாக இருக்கும். இதனுடைய Diagnosis Logs அனுப்பவும் வசதி இருக்கும் என நம்புகிறேன்.
2. Cycles Used
எப்ப எத்தனை தடவை எந்த மோடில் வைத்து மெஷினை பயன்படுத்தி இருக்கிறோம் என்று சொல்கிறது.இதனால் பெருசா உபயோகம் இல்லை என்றாலும் .. ஓரளவு வாஷிஙமெஷின் எவ்வளவு உபயோகிக்கிறோம் என தெரிந்து கொள்ளலாம்.
3. Energy Monitoring
இந்த Graph சரியா புரியல. இன்னும் கொஞ்சம் டைம் ஓடுன அப்புறம் இந்த Graph உபயோகம் ஆகும் என்று நினைக்கிறேன். ஆனால் போன மாசம் இவ்வளவு ஓடிருக்கு இந்த மாசம் ஏன் இவ்வளவு ஓடிருக்கு என்ற Analysis பண்ண உபயோகமாக இருக்கும்.
4. Tub Clean Coach
இது நல்ல ஒரு ஆப்ஷன் என நினைக்கிறேன். நமக்கு எப்பவுமே ஒரு டவுட் வரும் எப்ப லாஸ்ட் டைம் டப் க்ளீன் பண்ணுணோம் என்று. இந்த ஆப்ஷன் எப்ப அடுத்த முறை க்ளீன் பண்ணணும் என்று சொல்கிறது. Notification அனுப்புனா இன்னும் சிறப்பா இருக்கும்.
5. Download Cycles
Pre-program செய்யப்பட்ட துவைக்கும் ஆப்ஷன்கள். வாஷிங்மெஷினில் 10 ஆப்ஷன்கள் உள்ளன . அது போக நிறைய option களை Download செய்து வாஷிங்மெஷினில் செட் செய்து துவைத்துக் கொள்ளலாம். நிறைய பேருக்கு உபயோகம் ஆகும் என நினைக்கிறேன்.
நான் நினைச்ச அளவுக்கு Wi-Fi தேவையே இல்லாத ஆணி இல்ல.
Wi-Fi வைச்சதுக்கு கொஞ்சம் ரிப்போர்ட்டிங் ஆப்சன் மற்றும் Pre Programmed washing options கொடுத்து Justify பண்ணிருக்காங்க.
கருத்துகள்
கருத்துரையிடுக