சினன ஊருக்குள்ள நடக்கும் Investigation Thriller எப்பவுமே எனக்கு பிடித்த ஒன்று . அந்த வகையை சேர்ந்த படம் தான் இது. ஒரே நேரத்தில் இரண்டு கொலை கேஸ்களை பற்றியது. ஆனால் ஒரு கேஸ் 20 வருஷ பழசு.
IMDb 6.9
#Tamil dub ❌
OTT ❌
ஹீரோ ஒரு FBI போலீஸ் கிட்டத்தட்ட 20 வருஷம் கழிச்சு வறண்டு போய் இருக்கும் ஊருக்கு அவருடைய சிறு வயது நண்பனுக்கு இறுதி மரியாதை செலுத்த வருகிறார்.
இப்ப இறந்த நண்பனும் சும்மா சாகவில்லை அவனது மனைவி மற்றும் சின்ன குழந்தையை கொடூரமா சுட்டு விட்டு தற்கொலை பண்ணி இருக்கிறான் என்று உள்ளூர் போலீஸ் சொல்கின்றது.
ஆனால் எல்லாரும் ஊருக்குள்ள ஹீரோவை முறைச்சுக்கிட்டே இருக்கானுக. என்னனு பார்த்தா இப்ப இறந்தவன் + ஹீரோ மற்றும் இன்னும் 2 பொண்ணுங்க என 4 பேர்.. 20 வருஷத்துக்கு முன்னாடி ஒண்ணா சுத்திக்கிட்டு இருந்துருக்காங்க. அதுல ஒரு பொண்ணு 20 வருஷத்துக்கு முன்னாடி சந்தேகத்துக்கு உரிய முறையில் இறந்து விட சந்தேகம் இந்த இரண்டு பேர் மேல் விழுகிறது.
இதனால் ஊரை விட்டு போன ஹீரோ 20 வருஷம் கழிச்சு இப்ப தான் ஊருக்குள்ள வர்றாரு. இது ஊருக்குள் பழைய நினைவுகளை கிளப்பி விடுகிறது.
இப்ப இறந்த நண்பரின் பெற்றோர்கள் கண்டிப்பாக குடும்பத்தை கொன்று இருக்க மாட்டான் அதை பற்றி நீ விசாரிக்க வேண்டும் என ஹீரோவை கேட்டுக்கொள்ள வேறு வழி இல்லாமல் லோக்கல் போலீஸ் உடன் சேர்ந்து விசாரணையில் இறங்குகிறார்.
ஒரு பக்கம் விசாரணை மற்றும் பழைய ஃப்ளாஷ் பேக் என இரண்டும் மாறி மாறி படம் முழுவதும் வருகிறது. நல்ல படத்தொகுப்பு மற்றும் திரைக்கதை. கடைசியில் இரண்டு கேஸ் களுக்கும் முடிவு தெரிந்ததா என்பதை படத்தில் பாருங்கள்.
படம் மெதுவாக தான் போகிறது. கடைசி 30 நிமிடங்கள் நல்லா போகிறது. மொத்தம் 10 கேரக்டர்கள் தான் . அவர்களுக்குள் ஹீரோவை போலவே நம்மையும் ஒவ்வொருவராக சந்தேகப்பட வைக்கிறார் இயக்குனர்.
படத்தின் பேருக்கு ஏற்றவாறு ரொம்பவே Dry ஆன ஏரியாவில் படம் பிடித்து உள்ளார்கள். ஒரு வருஷமா மழை இல்லாமல் வறண்டு போய் இருக்கும் இடத்தின் தட்ப வெப்பம் எவ்வாறு இருக்கும் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிகிறது.
Decent ஆன crime investigation thriller ஆன கொஞ்சம் மெதுவாக தான் போகிறது.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
Aaron Falk goes back home to his drought-stricken town to attend a tragic funeral. However, his return reopens the door to the unsolved death of a teenage girl.
Director: Robert Connolly
Starring: Eric Bana; Genevieve O'Reilly; Keir O'Donnell; John Polson
Adapted from: The Dry
Story by: Jane Harper
கருத்துகள்
கருத்துரையிடுக