No Exit - 2022 Hulu Movie Tamil Review
நேத்து Hulu ல ரிலீஸ் ஆகி இருக்கும் ஒரு Horror Thriller .
புயலின் காரணமாக ஒரு முகாமில் தஞ்சமடைகிறார் ஹீரோயின். அங்கு வெளியே ஒரு காரில் ஒரு கடத்தப்பட்ட சிறுமியை பார்க்கிறார். அங்க தங்கியிருக்கும் ஒருத்தன் தான் வில்லன். எப்படி குழந்தையை காப்பாற்றினார் என்பதை படத்தில் பாருங்கள்.
Tamil dub ❌
DM for download link.
ஹீரோயின் போதைக்கு அடிமையான பெண். மறுவாழ்வு முகாமில் தங்கி உள்ளார். அவளது அம்மா சீரியஸாக இருக்கு என தகவல் வர. அங்கு இருந்து தப்பித்து ஒரு காரை திருடிக் கொண்டு போகும் வழியில் புயலில் சிக்கி ஒரு முகாமில் அடைக்கலம் ஆகிறார்.
அங்கு இவரைத் தவிர இன்னும் நான்கு பேர் உள்ளனர். மொபைல் சிக்னல் கிடைக்காததால் வெளியே வரும் ஹீரோயின் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வேனில் கைகள், வாய் கட்டப்பட நிலையில் ஒரு சிறுமியை கண்டுபிடிக்கிறார்.
இப்போது அந்த நாலு பேரில் யார் குழந்தையை கடத்தியவன் என கண்டுபிடித்து குழந்தைகயை காப்பாற்ற வேண்டும். எப்படி காப்பாற்றினார் என்பதை முடிந்த அளவுக்கு பரபரப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஆனால் கடத்தியவனை கொஞ்ச நேரத்தில் கண்டுபிடித்த உடன் என்னடா பொசுக்குனு போயிருச்சு என தோன்றினாலும் பின்னாடி வரும் ட்விஸ்ட்கள் அருமை.
ரொம்ப லாஜிக் எல்லாம் பார்க்காமல் ஜஸ்ட் என்ஜாய் பண்ணுங்க. நல்ல ஒரு திரில்லர்.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
ஆபாசக்காட்சிகள் இல்லை ஆனால் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக