மறைந்த Stanley Kubrick அவர்களின் இன்னொரு படம். இது வியட்நாம் போரை பற்றிய படம்.
IMDb 8.3 ( #105 Out Of Top 250 movies)
Tamil dub ❌
OTT ❌
2 படங்களை எடுத்து ஒட்ட வைத்து கொடுத்த மாதிரி இருந்தது. இரண்டு பாகங்களிலும் வரும் ஒற்றுமை நடித்த நடிகர்கள் மட்டுமே. முற்றிலும் வித்தியாசமான இரண்டு கதை.
முதல் 45 நிமிடங்கள் ஒரு மிலிட்டரி ட்ரைனிங் சென்ட்டரில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. அங்கு கையாளப்படும் அதீத வன்முறை மற்றும் நடத்தும் முறைகளால் ஒரு மனிதன் எந்த அளவுக்கு மனதை பாதிக்கும் என்பதை சொல்கிறது.
சைகோவாக மாறும் கேரக்டரில் Vincent D'Onofrio கலக்கி இருக்கிறார். Dare Devil சீரியல்ல வில்லனா வருவாருல அவருதான்.
இரண்டாவது பாகம் முழுவதும் வியட்நாமில் போரில் நடக்கும் சம்பவங்கள்.
முதல் பாதி ஒரே இடத்தில் நடந்தாலும் வேகமாக போனது போல் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதி மெதுவாக போனது.
படம் நல்லா தான் இருக்கு ஆனா இவ்வளவு High Rating கொடுத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வியட்நாம் போர் பற்றிய படம் என்பதால் அவங்க மக்கள் Rating நிறைய கொடுத்துட்டாங்க போல..
கண்டிப்பாக. ஒரு முறை பார்க்கலாம்.
Full Metal Jacket (1987)
A pragmatic U.S. Marine observes the dehumanizing effects the Vietnam War has on his fellow recruits from their brutal boot camp training to the bloody street fighting in Hue.
Director: Stanley Kubrick
Cast: Matthew Modine, Arliss Howard, R. Lee Ermey, Adam Baldwin, Vincent D’Onofrio, Kevyn Major Howard
Home Release Date: 2017-11-19
Screenplay: Stanley Kubrick & Michael Herr & Gustav Hasford, based on “The Short-Timers” by Gustav Hasford
Cinematography: Douglas Milsome
Music: Abigail Mead
கருத்துகள்
கருத்துரையிடுக