இது ஒரு வகையான மக்களை ஆசை காட்டி ஏமாற்றும் வழி. இந்த பேரை பெரும்பாலும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்படி இல்லனா Pyramid Scheme, MLM Scheme னு ஏதாச்சும் ஒரு பேருல சுத்திக்கிட்டு இருக்கும்.
இந்த Ponzi அப்படினு எப்படி பேர் வந்துச்சு ?
இது இன்னிக்கு நேத்து ஆரம்பித்தது இல்லை.1869 களிலேயே ஜெர்மனியில் இந்த மாதிரி ஸ்கீம் நடத்தி ஏமாத்துனாதா ரெக்கார்ட்ஸ் இருக்கு.
1920 களில் இத்தாலியை சேர்ந்த Charles Ponzi னு ஒருத்தர் தான் அமெரிக்காவில் பக்காவா ப்ளான் பண்ணி லம்ப்பா காச அடிச்சு மாட்டிக்கிட்டான். அவரோட ஞாபகார்த்தமாக தான் Ponzi Scheme னு செல்லமாக அழைக்கப்படுகிறது. இதிலிருந்து தான் உலகம் முழுவதும் இந்த பெயர் பிரபலம் அடைந்தது.
இதுல எப்படி ஏமாத்துறாங்க ? முதலில் 4 பேரை பிடிச்சு நாங்க அந்த பிஸினஸ் பண்றோம் , அந்த பிஸினஸ் பண்றோம்னு சரி கட்டி அமௌன்ட் வாங்குவார்கள். நிறைய வட்டி , அசல் திருப்பி தரப்படும்னு சொல்லி வலை வீசி எப்படியாவது அமௌண்ட் வாங்கி விடுவார்கள்.
அதான் இன்வெஸ்ட் பண்ண ஒரு எழவும் இல்லையே எப்படி அவனுக்க வட்டி கொடுக்குறது? அப்படியே நைஸா பேசி இன்னொரு நாலு பேரை பிடிப்பார்கள்.
அந்த நாலு பேர்ட்ட இருந்து லம்ப் அமௌன்ட் வாங்கி முதலில் சேர்ந்த 4 பேருக்கு வட்டி கொடுக்கப்படும். ஆனா பணத்த போட்ட எல்லாரும் ஏதோ சரியான பிஸினஸ் வழியாக தான் தனக்கு அமௌண்ட் வருதுன்னு நினைச்சுட்டு இருப்பாங்க.
இப்படியே பல அடுக்கா கீழ போகும். ஒரளவு அமௌன்ட் முதலில் சேர்ந்தவர்களுக்கு கிடைத்து விடும். இப்படியே போனால் பிரச்சினை இல்லை . ஆனால் ஒரு கட்டத்தில் நிறைய பேர் அசலை திருப்பி கேட்க ஆரம்பித்தால் தான் பிரச்சினை ஆரம்பிக்கும்.
அது அப்படியே செயின் ரியாக்ஷன் போல பரவி ஒரு கட்டத்தில் வெடித்து சிதறும். இல்ல இந்த ஸ்கீம் நடததுன குரூப் மக்களுக்கு டவுட் வர ஆரம்பித்ததும் கிடைச்ச அமௌண்ட்ட சுருட்டிட்டு கிளம்பிறுவானுக.
ஆக மொத்தம் முதலில் சேர்ந்தவன் ஓரளவு அமௌன்ட் பார்த்துருவான்.கடைசில சேர்ந்தவங்க நிலை தான் பரிதாபம். வட்டியும் வராது அசலும் போயிடும்.
இந்த Charles Ponzi ஒரு வருஷம் தான் இந்த ஸ்கீம நடத்திருக்கான். அந்த கேப்ல $20 Million (இப்போதைய மதிப்பில் $250 million) இதுல இன்வெஸ்ட் பண்ணவங்க பணம் காலி.
எந்த ஸ்கீமா இருந்தாலும் ப்ரடானு கண்டுபிடிக்க ஈஸியான வழி இருக்கு.
நிறைய வட்டி, ரிஸ்க் இல்லை (இல்லாட்டா கொஞ்சம் ரிஸ்க், நிறைய ரிட்டர்ன்ஸ் ) இந்த மாதிரி வார்த்தைகளை கேடடாலே உங்க மனசுக்குள்ள ஒரு அபாயசங்கு அடிக்கணும்.
அப்பதான் இந்த மாதிரி ப்ராடுப்பயலுக கிட்ட இருந்து எல்லாம் தப்பிச்சு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை காப்பாத்த முடியும்.
இது மாதிரி இன்னும் நிறைய ப்ராடு பண்ற வழிகள் இருக்கு வரும் நாட்களில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக