Dual Driver Earphones என்றால் என்ன ?

Dual Driver Earphones என்றால் என்ன ? post thumbnail image

 Ear phones வாங்க ஆராய்ச்சி பண்ணிருந்தீங்க என்றால் இந்த வார்த்தைகளை கண்டிப்பாக கேட்டு இருப்பீர்கள். அப்படி கேட்டும் சில பேர் கடந்து போயிருக்கலாம் சில பேர் என்னனு படிச்சுட்டு வாங்கி இருக்கலாம். இந்த Dual Driver னா என்னனு தெரியாமல் இருப்பவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகம் தான் இந்த போஸ்ட். 

இந்த மாதிரி ear phones களில் advantage என்ன ? 

சிம்பிளா சொல்லனும் என்றால் Sound Quality நல்லா இருக்கும்.  

Driver னா என்னனு முதலில் பார்க்கலாம்? 

இது தான் ஒரு முக்கியமான பாகம். நம்ம கேட்குற பாட்டை electrical energy ல  இருந்து Sound ஆ  மாத்துறது இது தான். பேஸிக்கா ஒரு ஸ்பீக்கர் என்று சொல்லலாம். கம்ப்யூட்டர்ல CPU எப்படியோ அதே மாதிரி தான் இங்க Driver. 

இந்த Driver தான் High-frequency, low frequency , Bass என எல்லாவற்றையும் கையாண்டு நமக்கு பாட்டு கேட்கும்போது ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்குது.  இப்படி எக்கச்சக்கமான frequencies கையாளும் போது இந்த Driver கொஞ்சம் ஓவரா வேலை பார்க்கும். அதுனால எல்லா Frequency handle பண்ண முடியாததால் Sound Quality கொஞ்சம் குறையும். 

இப்ப இரண்டு Driver இருந்துச்சுனா frequency handle பண்றது கொஞ்சம் எளிதாக இருக்கும். 

உதாரணமாக ஒரு Driver எல்லா frequency handle பண்ணும், இரண்டாவது Driver music ல உள்ள Bass handle பண்ணும். 

இப்படி பணணுறதால ஒரு Driver எல்லா frequency யையும் effective’a handle பண்றப்ப தானாகவே Sound Quality அதிகரிக்கும். 

நீங்க Single Driver லிருந்து Dual Driver மாறும் போது எளிதாக அந்த வித்தியாசத்தை உணர்வீர்கள். 

இப்போதைக்கு மார்க்கெட்டில் இருக்கும் Wired  Dual  Driver earphone களை பார்க்கலாம். 

என்னுடைய பர்சனல் சாய்ஸ் எப்பவும் MI Dual Driver earphone தான். 

விலை 699 ரூபாய். வெயிட் பண்ணீங்கனா ஏதாவது ஆஃபர்ல 600 ரூபாய்க்கு கிடைக்கும். 

இன்னும் கொஞ்சம் கம்மி விலையில் வேண்டும் என்றால் pTron brand ல் 400 ரூபாய்க்கு கிடைக்கும். MI அளவுக்கு குவாலிட்டி இல்லை என்றாலும் கொடுக்கும் காசுக்கு ஓகே தான். 

வேறு Brand எதுவும் affordable price ல் இருப்பதாக தெரியவில்லை.இருந்தால் பகிருங்கள். 

Triple Driver Earphones எல்லாம் மார்க்கெட்டில் உள்ளது. யாராவது உபயோகித்து இருந்தால் எப்படி இருக்குனு சொல்லுங்க. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Oppo Enco M32 – Bluetooth Neckband ReviewOppo Enco M32 – Bluetooth Neckband Review

⭐⭐⭐⭐.5/5 எனக்கு தெரிஞ்சு 1 Plus Bulletz 1500 ரூபாய் ரேன்ஜில் தரமான ஒரு neckband. அதை உபயோகித்தால் எதை வாங்குவது என ஒரே குழப்பம். Boat Rockerz 330 ANC வாங்கி பிடிக்காமல் திரும்ப கொடுத்து விட்டேன்.  ட்விட்டரில் கேட்டதில்

Boat Rockerz 330 ANC Bluetooth Neckband -ReviewBoat Rockerz 330 ANC Bluetooth Neckband -Review

⭐⭐⭐.5/5 இரண்டு நாள் யூஸ் பண்ணேன். எனக்கு அவ்வளவா திருப்தி இல்லை அதுனால ரிட்டர்ன் பண்ண போறேன். இந்த மாடல் வாங்கனும்னு ஐடியா இருக்குறவங்க ஏன்னு தெரிஞ்சுக்க படிங்க.  Look :  Look wise நல்லா தான் இருந்தது. ஆனா Ear