முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Kimi - 2022

Ocean 11, Erin Brokovich , Logan Lucky போன்ற நல்ல படங்களை இயக்கிய  Steven Soderbergh ன் படம் .  ஒரு IT Company employee ஏதாச்சையாக ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கிறார். அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம்.  IMDb 6.3 #Tamil dub ❌ Available @primevideo #Kimi  என்பது ஒரு Siri, Alexa மாதிரி ஒரு Digital Assistant. இந்த கம்பெனியின் Stream Processing ல் வேலை பார்க்கிறார் Angela.  Kimi புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை கேட்டு அதற்கு ஏற்றாற்போல் Algorithm ஐ மாற்றுவது இவர்‌ வேலை.  ஆனால் இவர் ஒரு agoraphobic நோயாளி. அதாவது வீட்டை விட்டு வெளியேற பயம், கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு போக பயம்.  ஒரு நாள்  Stream Processing பண்ணும் போது ஒரு பெண் தாக்கப்பட்டு மிரட்டப்படுவதை கண்டுபிடிக்கிறார்.  இவர் கண்டுபிடித்த விஷயத்தை ரிப்போர்ட் பண்ண ஆபீஸுக்கு போக வேண்டிய கட்டாயம். இவர் கண்டுபிடித்த விஷயம் மிகப்பெரியது என்பதால் இவரை தேடுகிறது ஒரு கேங்.  இவ்வாறான சூழ்நிலையில் எப்படி சமாளித்தார் என்பதை படத்தில் பாருங்கள்.  படம் மெதுவாக ஆரம்பிக்கின்றது. ஆனால் வீட்டை விட்டு கிளம்பிய பின் பரபரப்பாகிறது.  கோவிட் டைமை

No Exit - 2022

No Exit - 2022 Hulu Movie Tamil Review  நேத்து Hulu ல ரிலீஸ் ஆகி இருக்கும் ஒரு Horror Thriller .  புயலின் காரணமாக ஒரு முகாமில் தஞ்சமடைகிறார் ஹீரோயின். அங்கு வெளியே ஒரு காரில் ஒரு கடத்தப்பட்ட சிறுமியை பார்க்கிறார். அங்க தங்கியிருக்கும் ஒருத்தன் தான் வில்லன். எப்படி குழந்தையை காப்பாற்றினார் என்பதை படத்தில் பாருங்கள்.  Tamil dub ❌ DM for download link.  ஹீரோயின் போதைக்கு அடிமையான பெண். மறுவாழ்வு முகாமில் தங்கி உள்ளார். அவளது அம்மா சீரியஸாக இருக்கு என தகவல் வர. அங்கு இருந்து தப்பித்து ஒரு காரை திருடிக் கொண்டு போகும் வழியில் புயலில் சிக்கி ஒரு முகாமில் அடைக்கலம் ஆகிறார்.  அங்கு இவரைத் தவிர இன்னும் நான்கு பேர் உள்ளனர்.  மொபைல் சிக்னல் கிடைக்காததால் வெளியே வரும் ஹீரோயின் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வேனில் கைகள், வாய்  கட்டப்பட நிலையில் ஒரு சிறுமியை கண்டுபிடிக்கிறார்.  இப்போது அந்த நாலு பேரில் யார் குழந்தையை கடத்தியவன் என கண்டுபிடித்து குழந்தைகயை காப்பாற்ற வேண்டும். எப்படி காப்பாற்றினார் என்பதை  முடிந்த அளவுக்கு பரபரப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.  ஆனால் கடத்தியவனை கொஞ்ச நேரத்தில் கண்டுபி

Qubani-ka-Meetha -Apricot Dessert

ஹைதராபாத் பக்கம் வசித்து இருந்தீர்கள் என்றால் இந்த இனிப்பை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் ‌‌.  நிறைய பேருக்கு பிடிக்காது ஆனால் எனக்கு மிகவும் பிடித்த Dessert களில் ஒன்று.  ஆப்ரிகாட்டின் உருது பெயர் தான் Qubani.  பதப்படுத்தப்பட்ட ஆப்ரிகாட் பழங்களை Syrup ல் போட்டு நல்லா திக்காக வரும் வரை காய்ச்சுவார்கள். வெறுமையாக சாப்பிட நன்றாக தான் இருக்கும் ஆனால் ஐஸ்கிரீம் உடன் கலந்து சாப்பிட்டால் ரொம்பவே அருமையாக இருக்கும். Hyderabad ல் வசித்த நாட்களில் Paradise ஹோட்டலில் பிரியாணியை ஒரு பிடி பிடித்து விட்டு இந்த Qubani ka meetha வை ஒரு Scoop icecream உடன் சாப்பிட்டால் அட அட அமிர்தமாக இருக்கும்.  இந்த ஃப்ளாஷ் பேக்கிற்கு காரணம் நேத்து பெட்டிக்கடையில் வாங்கி தின்ன இந்த ஆப்ரிகாட் தான் 😂😂 சென்னையில் கிடைப்பது போல தெரியவில்லை. இங்க எல்லாரும் Double Ka Meetha தான் வைச்சுருக்காங்க.  ஏதாவது கடை தெரிந்தால் சொல்லுங்கள். 

The Dry - 2020

சினன ஊருக்குள்ள நடக்கும் Investigation Thriller எப்பவுமே எனக்கு பிடித்த ஒன்று . அந்த வகையை சேர்ந்த படம் தான் இது. ஒரே நேரத்தில்  இரண்டு கொலை கேஸ்களை  பற்றியது. ஆனால் ஒரு கேஸ் 20 வருஷ பழசு.  IMDb  6.9 #Tamil dub ❌ OTT ❌ ஹீரோ ஒரு FBI போலீஸ் கிட்டத்தட்ட 20 வருஷம் கழிச்சு வறண்டு போய் இருக்கும் ஊருக்கு அவருடைய சிறு வயது நண்பனுக்கு இறுதி மரியாதை செலுத்த வருகிறார்.‌ இப்ப இறந்த நண்பனும் சும்மா சாகவில்லை அவனது மனைவி மற்றும் சின்ன குழந்தையை கொடூரமா சுட்டு விட்டு தற்கொலை பண்ணி இருக்கிறான் என்று உள்ளூர் போலீஸ் சொல்கின்றது.  ஆனால் எல்லாரும் ஊருக்குள்ள ஹீரோவை முறைச்சுக்கிட்டே இருக்கானுக. என்னனு பார்த்தா இப்ப இறந்தவன் +‌ ஹீரோ மற்றும் இன்னும் 2 பொண்ணுங்க என 4 பேர்..‌ 20 வருஷத்துக்கு முன்னாடி ஒண்ணா சுத்திக்கிட்டு இருந்துருக்காங்க. அதுல ஒரு பொண்ணு 20 வருஷத்துக்கு முன்னாடி சந்தேகத்துக்கு உரிய முறையில் இறந்து விட சந்தேகம் இந்த இரண்டு பேர் மேல் விழுகிறது.  இதனால் ஊரை விட்டு போன ஹீரோ 20 வருஷம் கழிச்சு இப்ப தான் ஊருக்குள்ள வர்றாரு.  இது ஊருக்குள் பழைய நினைவுகளை கிளப்பி விடுகிறது.  இப்ப இறந்த நண்பரின் பெற்றோர

Financial Crimes - ரோமப் பேரரசை விற்ற கதை தெரியுமா உங்களுக்கு ?

கி.பி. 193 மார்ச் 23  ஆம் தேதி உள்நாட்டு கலவரங்கள் மற்றும் அமைதியின்மையை பயன்படுத்தி அப்போதைய அரசரான Pertinax என்பவரை கொலை செய்து விட்டு  ரோமப் பேரரசையே ஏலம் விட்டார்கள் அரசரின் நம்பிக்கையை பெற்ற முதன்மை காவலர்கள் Praetorian Guard (a special army supposedly loyal to the emperor), இந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர் ஜீலியானஸ் ( Julianus) . இவர் கொடுத்த தொகை அந்த ஆர்மில இருக்குற ஒவ்வொருவருக்கும்  250 தங்க கட்டிகள் . இன்றைய பணத்தில் பார்த்தீங்கனா $1 பில்லியன்.  சரி இத எதுக்கு Financial Crime என்று சொல்கிறோம் ? எவன் பொருள எவன்டா விக்கிறது என்கிற மாதிரி தனக்கு சொந்தமே இல்லாத பொருளை வித்து கல்லா கட்டுனதுனால தான் .  இந்த புது அரசர் பதவியில் இருந்ததது மொத்தம் 9 வாரங்கள் மட்டுமே.  சரி‌ புது பேரரசர் பதவி ஏற்றவுடன் பண்ண முதல் காரியம் என்னவா இருக்கும் என்று சொல்லுங்கள் பாக்கலாம் ....  இதற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளை இங்கு படிக்கலாம்: https://medium.com/illumination-curated/the-entire-roman-empire-was-once-auctioned-off-to-the-highest-bidder-5e3bd055e236 ,  

Heavenly Creatures - 1994

Heavenly Creatures Tamil Review  இரண்டு ஸ்கூல் புள்ளைங்க நல்ல ப்ரண்ட்ச் ‌‌. இவங்க ப்ரண்ட் ஷிப் கொஞ்சம் எல்லை மீறி போகுதுனு நினைக்கிறார்கள் இருவருடைய பெற்றோர்களும். அதனால் இவர்களை பிரிக்கனும் என்று முடிவு செய்கிறார்கள்.  IMDb 7.3 Tamil dub ❌ OTT ❌ இதனால் கடுப்பான ப்ரண்ட்ச் இருவரும் பெற்றோர்களை பழிவாங்க முடிவு செய்கிறார்கள் . கடைசியில் என்ன ஆனது என்பதை படத்தில் பாருங்கள்.  1950 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்த நண்பிகளில் ஒரு பெண் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் டைரியில் எழுதி வைக்க அதை தழுவி படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர்.  ப்ரண்ட்ஸ் இருவரும் தங்களுக்கு என்று ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கி வாழ்கின்றனர். இதனாலேயே பல பிரச்சினைகள் உருவாகிறது.  Melanie & Kate இருவரும் நல்ல நடிப்பு. நல்ல திரைக்கதை மட்டும் இயக்கம். ஆனால் படம் செம ஸ்லோ. ரொம்பவே பொறுமை வேண்டும்.  Not for everyone  க்ளைமாக்ஸ் கொஞ்சம் பதற வைக்குது..  Director: Peter Jackson Cast: Melanie Lynskey, Kate Winslet, Diana Kent, Sarah Peirse, Clive Merrison, Simon O'Connor, Jed Broph

Texas Chainsaw Massacre - 2022

 1970 களில் இதே பெயரில் வந்த படம் ரொம்ப ஃபேமஸ். அந்த படத்தின் Sequel போல டிரை பண்ணிருக்காங்க.  அந்த படத்தில் உயிர் தப்பிய ஒரு பெண் 50 வருஷமா அந்த கொலகாரனை தேடிக்கொண்டு இருக்கிறார்.  இன்னொரு பக்கம் ஒரு குரூப் ஆள் இல்லாத ஊருக்கு போகுது டெம்ப்ளேட். அங்க அந்த கொலைகாரன் வர்றான். ஆமா அந்த Chainsaw கொண்டுட்டு தான் வர்றான். கண்ணுல படுற எல்லாத்தையும் கொடூரமான கொல்றான்.  கடைசில இவன கொன்னாங்களா  ? அந்த கிழவி இவனா பழி வாங்குச்சா? அந்த குரூப்லா யாராச்சும் தப்பிச்சாங்களா என்பது தான் படம்.  Slasher/Gore படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பாருங்கள். வன்முறை ரொம்பவே ஜாஸ்தி. மற்றவர்கள் தவிர்ப்பது நலம்.

Dual Driver Earphones என்றால் என்ன ?

 Ear phones வாங்க ஆராய்ச்சி பண்ணிருந்தீங்க என்றால் இந்த வார்த்தைகளை கண்டிப்பாக கேட்டு இருப்பீர்கள். அப்படி கேட்டும் சில பேர் கடந்து போயிருக்கலாம் சில பேர் என்னனு படிச்சுட்டு வாங்கி இருக்கலாம். இந்த Dual Driver னா என்னனு தெரியாமல் இருப்பவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகம் தான் இந்த போஸ்ட்.  இந்த மாதிரி ear phones களில் advantage என்ன ?  சிம்பிளா சொல்லனும் என்றால் Sound Quality நல்லா இருக்கும்.   Driver னா என்னனு முதலில் பார்க்கலாம்?  இது தான் ஒரு முக்கியமான பாகம். நம்ம கேட்குற பாட்டை electrical energy ல  இருந்து Sound ஆ  மாத்துறது இது தான். பேஸிக்கா ஒரு ஸ்பீக்கர் என்று சொல்லலாம். கம்ப்யூட்டர்ல CPU எப்படியோ அதே மாதிரி தான் இங்க Driver.  இந்த Driver தான் High-frequency, low frequency , Bass என எல்லாவற்றையும் கையாண்டு நமக்கு பாட்டு கேட்கும்போது ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்குது.  இப்படி எக்கச்சக்கமான frequencies கையாளும் போது இந்த Driver கொஞ்சம் ஓவரா வேலை பார்க்கும். அதுனால எல்லா Frequency handle பண்ண முடியாததால் Sound Quality கொஞ்சம் குறையும்.  இப்ப இரண்டு Driver இருந்துச்சுனா frequency handle பண்ற

Financial Crimes - Enron Scandal

உலகத்தை உலுக்கிய சில Financial Crimes ஐ நம்ம பாத்துட்டு வர்றோம். அந்த வகையில் ஒரு காலத்தில் Wall Street ன் செல்லப் பிள்ளையாக இருந்த Enron Company எப்படி நாசமா போச்சுனு பார்க்கலாம்.  Enron 1985 ல ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி ‌‌இந்த கம்பெனியோட முக்கிய வியாபாரம் Energy business.  . நல்லா innovation எல்லாம் பண்ணி 90 s ல செம் லாபம் பார்த்த நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளனர்.  இதெல்லாம் பார்த்து பாராட்டி பல அவார்டுகள் கொடுத்து இருக்கிறார்கள்.  America’s Most Innovative Company” by Fortune for six consecutive years: 1996–2001. 1992 ல அவங்களோட Accounting method'a (MTM) மாற்றிக்கொள்ள ரெகுலேட்டர்ஸ் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். இந்த முறையில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு.  2000 வருடத்தில் வீடியோ ரெண்டல், Broadband என பல பிசினஸ்ஸில் பெரிய அளவில் முதலீடு செய்து இருக்கிறார்கள். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்த கம்பெனியின் பங்கு அதன் All time High விலையை எட்டியது $90.56 நிறைய பிசினஸ் சரியா போகவில்லை என்றாலும் புதிய Accounting முறையை தவறான வழியில் பயன்படுத்தி லாபத்தை கூட்டியும், நஷ்டத்தை குறைத்தும்

Good Will Hunting - 1997

Ben Affleck & Matt Damon இணைந்து திரைக்கதை எழுத Robin Williams போன்ற பெரிய தலை நடித்து வந்த ஒரு டிராமா படம் தான் இது. கொஞ்சம் ஸ்லோ ஆனா நல்ல ஃபீல் குட் படம்.  IMDb 8.3 Tamil dub ❌   OTT ❌ Won 2 Oscars ( Support Role & Screen Play)  உலகப்புகழ் பெற்ற MIT கல்லுரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்கிறான் Will. இயற்கையிலேயே கணிதம் மற்றும் மற்ற துறைகளில் ஆர்வம் மற்றும் புத்தகங்கள் மூலம் அனைத்தையும் தெரிந்து வைத்து உள்ளான்.  யாருமே தீர்க்க முடியாத தியரிக்கள் எல்லாவற்றையும் யாருக்கும் தெரியாமல்  அசால்ட்டாக அங்கு உள்ள பெரிய கரும்பலகையில் தீர்க்கிறான்.  அவ்வளவு திறமை இருந்தாலும் முன்கோபம், அடிதடியில் இறங்குதல், 10 கேஸ் என சமூகத்தில் ஒட்டாமல் நான்கு நண்பர்களுடன் திரிகிறான்.  ஒரு நாள் இவன் தியரியை எழுதுவதை பார்க்கிறார் புரபசர் ஒருவர். இவனை மாற்ற நல்ல வழிக்கு கொண்டு வர பல சைக்காலஜிஸ்ட்களை அணுகுகிறார் . யாராலும் இவனை புரிந்து நல்ல வழிக்கு கொண்டு வர இயலாததால் தன்னுடைய பழைய நண்பரான ஒரு சைக்காலஜிஸ்ட்டை அணுகுகிறார்.  இருவரும் சேர்ந்து இவனை வழிக்கு கொண்டு வந்து அவனுடை திறமையை வெளிக்கொண்டு வந்தார்

Washing Machine ல WiFi எதுக்கு ?

போன வாரம் washing machine வாங்க Show Room போனேன். ஓரளவு என்ன நமக்கு வேண்டும் என்ற ஐடியா இருந்தாலும் என்ன ப்ராண்ட் வாங்கலாம் என்பதில் கொஞ்சம் குழப்பம்.  ஏற்கனவே Direct Drive technology பத்தி கொஞ்சம் படிச்சுட்டு போய் இருந்தேன் . அவங்க காட்டுன DD model  மற்றும் சேல்ஸ்மேன் சொன்ன விதம் எனக்கு கொஞ்சம் திருப்தியை கொடுத்தது.  அதனால் LG Front load with DD டெக்னாலஜி வாங்கியாச்சு. ஆனா சேல்ஸ்மேன் திரும்ப திரும்ப சொன்னது WiFi இருக்கு சார் நீங்க ஆஃபிஸ்ல இருந்தே கண்ட்ரோல் பண்ணலாம் என்று. எனக்கு இதில் அவ்வளவு உடன்பாடில்லை மற்றும் அவ்வளவு பிஸியும் இல்லை . நான் அவர்ட்ட சொன்னது வாஷிங்மெசின்க்கு எதுக்கு பாஸ் WiFi. ஆனால் நாங்கள் வாங்கிய மாடலில் WiFi இருந்தது.  அன்னிக்கு வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம் அதனால் வாங்கிட்டேன்.  2 நாள்ல வாஷிங்மெஷின் செட் அப் பண்ணி உபயோகிக்க ஆரம்பித்தாயிற்று. சரி சேல்ஸ்மேன் WiFi WiFi னு சொல்லிட்டே இருந்தாரேனு டிரை பண்ணினேன். எந்த அளவுக்கு உபயோகமா இருக்குனு பாக்கலாம்.‌ இனிமே வாங்குறவங்களுக்கு கொஞ்சம் ஐடியா கிடைக்கும் என்பதற்கு தான் இந்த போஸ்ட்.  LG ThinQ என்று ஒரு ஆஃப் ரெடி பண்ணிருக்

Financial Crimes - Sumitomo Copper scandal

Commodity Trading பண்றவங்களுக்கு இந்த Scandal  பற்றி கண்டிப்பாக தெரிஞ்சு இருக்கும். காசு , பவர் இருக்குனு கண்ணு மண்ணு தெரியாம ஆடுனா என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.  1995 வருஷம் இந்த நிகழ்வு உலகம் முழுவதும் Commodity சந்தையில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  Sumo Tomo ஒரு ஜப்பானிய கம்பெனி . இவங்க Commodity Trading பண்ணிட்டு இருந்தாங்க. இதுபோக தனியா Copper division வைச்சு copper trading மற்றும் Physical Copper வாங்கி அவங்க குடோன்ல வைக்கிறது மற்றும் அதை விற்று லாபம் பாக்குறது . இதெல்லாம் போக London Metal Exchange ல Copper Future களிலும் Invest பண்ணிருந்தாங்க.  இதில் Copper Trading Division Head Trader தான் Yasuo Hamanaka. இந்த கம்பனில Copper சம்பந்தப்பட்ட எந்த முடிவையும் எடுப்பது Hamanka தான்.  இந்த Hamanka Copper Trading பண்றேன்னு எப்படி இந்த கம்பெனிய காலி பண்ணி தெருவுக்கு கொண்டு வந்தானு பார்க்கலாம்.  ஜப்பான் மற்றும் உலகம் முழுவதும் காப்பரை வாங்கி குடோன்ல வைக்கிறார். இவரோட கணிப்பு காப்பர் விலை உயரும் என்பது. இப்படியே எக்குத்தப்பாக காப்பரை வாங்கி குவிந்ததால் உலகத்தில் உள்ள காப்பரில் 5% இவன

Pee Mak - 2013

Pee Mak - 2013 Thai Comedy Movie Review In Tamil  நான் முதல் முதலாக பார்த்த தாய்லாந்து படம் Shutter. நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள் . இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது தமிழ்ல கூட சிவி என்று ரீமேக் செய்யப்பட்டது. நேத்து நண்பர் ஒருத்தர் Pee Mak படம் பாருங்க என்று சொன்னார்.  IMDb 7.3  Tamil Dub ❌ OTT ❌ Tamil Remake ✅ (பயமா இருக்கு ) தாய்லாந்து படம் என்ற உடனே ஞாபகம் வந்தது Shutter தான்.  5 நண்பர்கள் மிலிட்டரியில் போர் முடிந்து நண்பனின் கிராமத்துக்கு வருகிறார்கள். அங்கே நண்பனின் அழகான மனைவி அவனுக்காக  காத்துக்கொண்டு இருக்கிறார்.  ஆனால் ஊரில் யாரும் இவர்களுடன் பழகுவது இல்லை. எல்லாரும் பார்த்தா மிரண்டு ஓடுகிறார்கள்.  நண்பனின் மனைவி இறந்துவிட்டார் என சொல்கிறார்கள்.  ஆனால் அந்த பெண் வீட்டில் குழந்தையோடு இருக்கிறார்.. இதில் எது உண்மை ? யார் பேய் ? என்பதை ஹாரரை குறைத்து காமெடியை அதிகமாக்கி சொல்லி இருக்கிற படம் தான் இது. சும்மா சொல்லக்கூடாது காமெடி நன்றாகவே செட் ஆகி இருக்கிறது. அதுவும் பேயுடன் Dumb Charades விளையாடும் காட்சி, பொருட்காட்சியில் பேய் வீட்டுக்கு போறது, போட்டில் போகும் காட்

Financial Crimes - Ponzi Scheme

இது ஒரு வகையான மக்களை ஆசை காட்டி  ஏமாற்றும் வழி. இந்த பேரை பெரும்பாலும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்படி இல்லனா Pyramid Scheme, MLM Scheme னு ஏதாச்சும் ஒரு பேருல சுத்திக்கிட்டு இருக்கும்.  இந்த Ponzi அப்படினு எப்படி பேர் வந்துச்சு ?  இது இன்னிக்கு நேத்து ஆரம்பித்தது இல்லை.1869 களிலேயே ஜெர்மனியில் இந்த மாதிரி ஸ்கீம் நடத்தி ஏமாத்துனாதா ரெக்கார்ட்ஸ் இருக்கு.   1920 களில் இத்தாலியை சேர்ந்த Charles Ponzi னு ஒருத்தர் தான் அமெரிக்காவில்  பக்காவா ப்ளான் பண்ணி லம்ப்பா காச அடிச்சு மாட்டிக்கிட்டான்.  அவரோட ஞாபகார்த்தமாக தான் Ponzi Scheme னு செல்லமாக அழைக்கப்படுகிறது. இதிலிருந்து தான் உலகம் முழுவதும் இந்த பெயர் பிரபலம் அடைந்தது.  இதுல எப்படி ஏமாத்துறாங்க ? முதலில் 4 பேரை பிடிச்சு நாங்க அந்த பிஸினஸ் பண்றோம் , அந்த பிஸினஸ் பண்றோம்னு சரி கட்டி அமௌன்ட் வாங்குவார்கள். நிறைய வட்டி , அசல் திருப்பி தரப்படும்னு சொல்லி வலை வீசி எப்படியாவது அமௌண்ட் வாங்கி விடுவார்கள்.  அதான் இன்வெஸ்ட் பண்ண ஒரு எழவும் இல்லையே எப்படி அவனுக்க வட்டி கொடுக்குறது?  அப்படியே நைஸா பேசி இன்னொரு நாலு பேரை பிடிப்பார்கள்.  அந்த நாலு ப

Hyundai 10000 - Floating Crane

நேத்து ஒரு வீடியோ பார்த்தேன் . கிரேன் ஒன்னு ஒரு பெரிய கப்பலை தூக்கிட்டு இருக்குற மாதிரி. அந்த கிரேன் கூட தண்ணில ஒரு மிதக்கும் அமைப்பில் இருந்த மாதிரி தெரிந்தது.பாக்கவே பயங்கர பிரம்மாண்டமாக இருந்தது .. சரி இது என்னன்னு படிக்க ஆரம்பித்தேன் . அப்போது தெரிந்து கொண்டதை பகிர்கிறேன்.  இந்த கிரேன் பெயர் Hyundai-10000 . இதை  Hyundai Heavy Industries Co., Ltd. (HHI) எனும் கொரியன் கம்பெனி உருவாக்கி இருக்கிறது.  இதனை உருவாக்கும் வேலை 2013 ல் ஆரம்பித்து, 2015 வருடம் முடிவு பெற்றுள்ளது.  இதனுடைய தூக்கும் திறன் 10000 டன்கள். இதற்கு முன்னாடி வரைக்கும் உலகின் மிகப்பெரிய கிரேனின் தூக்கும் திறன் 1600 டன்கள் மட்டும். இதிலிருந்தே தெரிந்து இருக்கும் எவ்வளவு பவர்ஃபுல் என்று.  இது ஒரு Shear leg type floating crane (Shear legs, also known as sheers, shears, or sheer legs, are a form of two-legged lifting device) .  இந்த கிரேனை ஒரு Barge (மிகப்பெரிய Flat படகு) ல Fix பண்ணிக்கலாம் . 360 Degree சுத்தும் திறன் உடையது.  எதையாவது ஹெவியா தூக்கிட்டு இருக்குறப்ப ஏதாவது சின்ன ஃபெயிலியர் ஏற்ப்பட்டாலும் அந்த பொருளை கீழே வி

CTRL+F9

நண்பரின் DM பற்றிய ஜோக் படிக்கும் போது ஞாபகம் வந்தது. இத போஸ்ட் பண்ணிருக்கனு தெரியல. ரீ போஸ்ட்டா கூட இருக்கலாம்.  இது நான் காலேஜ் படிக்கும் போது நடந்த சம்பவம். கொஞ்சூண்டு டெக்னிக்கல்.  இது என்னுடைய கல்லூரியில் முதல் வருடம் நடந்தது. நாங்கள் படித்ததும் சுமாராகத்தான் அதனால் மேனேஜ்மெண்ட் கோட்டா தான் கிடைத்தது. நான் படித்தது கணிப்பொறி அறிவியல் குரூப். முதல் வருடத்தில் 'C' மொழி பாடத்திட்டத்தில் இருந்தது. அதற்கான செய்முறை பயிற்சி வகுப்புகளும் உள்ளது. ஒருநாள் மதியவேளையில் முதல்முறையாக கம்ப்யூட்டர் சயின்ஸ் லேபிற்கு கூட்டிச் சென்றனர். எங்களின் பாதி நபர்களுக்கு அதுதான் முதல் கம்ப்யூட்டர் அனுபவம். ஒரு எளிதான புரோகிராம் வகுப்பில் போர்டில் எழுதி அதை நோட்டில் காப்பி செய்து பின்புதான் லேப்புக்குள் அனுமதித்தனர். எங்களுடைய வேலை அதை கம்ப்யூட்டரில் டைப் செய்து கம்பைல் மற்றும் ரன் செய்வது அனைவரும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து தட்டச்சு செய்ய ஆரம்பித்தோம் . பெரும்பாலானவர்களுக்கு முதல்முறையாக ஒவ்வொரு எழுத்தாக அடிக்க ஆரம்பித்தோம். எங்கள் நண்பர்களில் ஒருவன் மிகவும் ஆர்வக்கோளாறு. கோடைகால விடுமுறைகளில் தட்ட

Full Metal Jacket - 1987

 மறைந்த Stanley Kubrick அவர்களின் இன்னொரு படம். இது வியட்நாம் போரை பற்றிய படம்.  IMDb 8.3 ( #105 Out Of Top 250 movies)  Tamil dub ❌  OTT ❌ 2 படங்களை எடுத்து ஒட்ட வைத்து கொடுத்த மாதிரி இருந்தது. இரண்டு பாகங்களிலும் வரும் ஒற்றுமை நடித்த நடிகர்கள் மட்டுமே. முற்றிலும் வித்தியாசமான இரண்டு கதை. முதல் 45 நிமிடங்கள் ஒரு மிலிட்டரி ட்ரைனிங் சென்ட்டரில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. அங்கு கையாளப்படும் அதீத வன்முறை மற்றும் நடத்தும் முறைகளால் ஒரு மனிதன் எந்த அளவுக்கு மனதை பாதிக்கும் என்பதை சொல்கிறது.  சைகோவாக மாறும் கேரக்டரில் Vincent D'Onofrio கலக்கி இருக்கிறார். Dare Devil சீரியல்ல வில்லனா வருவாருல அவருதான்.  இரண்டாவது பாகம் முழுவதும் வியட்நாமில் போரில் நடக்கும் சம்பவங்கள்.  முதல் பாதி ஒரே இடத்தில் நடந்தாலும் வேகமாக போனது போல் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதி மெதுவாக போனது.  படம் நல்லா தான் இருக்கு ஆனா இவ்வளவு High Rating கொடுத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  வியட்நாம் போர் பற்றிய படம் என்பதால் அவங்க மக்கள் Rating  நிறைய கொடுத்துட்டாங்க போல..  கண்டிப்பாக. ஒரு முறை பார்க்கலாம்.  Full Meta

IMAX - அறிமுகம்

IMAX - என்றால் என்ன ?  எனக்கு தெரிஞ்சு பெரிய ஸ்கீரீன்ல படம் ஓடும், ஆடியோ குவாலிட்டி நல்லா இருக்கும்.  சரி கொஞ்சம் இத பத்தி படிக்கலாம்னு Search பண்ணப்ப கிடைத்த தகவல்களை translate பண்றேன்.  Image Maximum என்பதன் சுருக்கமே IMAX.  1967 ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கனடாவை சேர்ந்த கம்பெனி.  பல சிறப்பம்சங்கள் கொண்ட கேமரா, format, screen எல்லாமே தனியா Full Stock வைத்து இருக்கிறார்கள். 12K resolution ல் படம் பிடிக்கப்படுகிறது.  தியேட்டரில்  Speaker கள் திரைக்கு பின்புறம் வைக்கப்படுகிறது.  இவர்களுக்கு என்றே தனித்துவமான 12.1 சேனல் சவுண்ட் சிஸ்டம் Patent வைத்து இருக்கிறார்கள். தியேட்டரில் இதற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து அருமையான ஒரு Experience ஐ கொடுக்கிறார்கள்.  நார்மலான IMAX screen size 72×62 அடி.  உலகத்திலேயே பெரிய IMAX screen ஜெர்மனியில் உள்ளது . இதன் அளவுகள்  144×75 அடி.  இந்தியாவில் ஹைதராபாத்தில் இருந்த ஸ்கிரீன் தான் பெருசு 95×72 அடி. இந்த IMAX உபயோகித்து படம் எடுப்பதில் வெறித்தனமா இருப்பவர் டைரக்டர் Christopher Nolan .  இது நிறைய வெப்சைட்டுகள் மற்றும் Quora வில் இருந்து எடுத்த தகவல்களின் தொகுப்பு

Nightmare Alley - 2021

Pan Labyrinth , The Shape Of Water போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த Guillermo del Toro இயக்கத்தில் வெளியான படம் இது.  1940 களில் நடப்பது போன்று எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர்.  IMDb 7.3 Tamil dub ❌ OTT ❌ ஹீரோ யாரையோ வீட்டோட கொளுத்தி விட்டுட்டு நாடோடியாக திரிந்து ஒரு பொருட்காட்சி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறான்.  ரொம்பவே திறமையான ஹீரோ மிக விரைவில் அந்த பொருட்காட்சியில் நல்ல பெயரை பெறுகிறான்.   பிறர் மனதில் இருப்பதை கண்டுபிடிக்கும் ட்ரிக் கை ஒரு தம்பதியிடம் இருந்து கற்றுக் கொள்கிறான்.  அங்க உள்ள ஒரு நல்ல பொண்ணை கரெக்ட் பண்ணி கிளம்பி விடுகிறான்.  சில வருடங்கள் கழித்து தம்பதிகள் இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணி பணம் சம்பாதிக்கின்றனர். இந்த ட்ரிக்கை ரொம்பவே நிறைய யூஸ் பண்ணி செத்தவங்க கிட்ட பேசறேனு கிளம்புகிளான் ஹீரோ.  ஒரு பெண் மனோதத்துவ டாக்டர் மூலம் பெரிய லெவல்ல பழக்கம் ஏற்பட . அவர்களிடமும் வேலையை காட்டுகிறார் . அதனால் ஏற்படும் பிரச்சினைகள் வாழ்க்கை ஒரு வட்டம் என ஹீரோக்கு உணர்த்துகிறது.  2.30 மணி நேர பெரிய படம்.  முதல் பாதி முழுவதும் ஹீரோ, அவருடைய சர்வைவரல் , வளர்ச்சி, காதல்  மற்றும் இன்ன பிற கத

Merantu - 2009

Raid, Raid 2 படத்தின் டைரக்டர் + ஹீரோ combo வின்  முதல் படம் தான் இது.  செம ஆக்சன் படத்துக்கு ஒரு சின்ன ஸ்டோரிலைன் மற்றும் கொஞ்சம் சென்டிமென்ட் சேர்த்து கொடுத்து இருக்கிறார்கள்.  IMDb 6.7  #Tamil dub ❌ OTT ❌ ஹீரோ Iko Uwais இந்தோனேஷியாவில் ஏதோ ஒரு கிராமத்தில் வசிக்கிறார். Silat தற்காப்பு கலையில் வல்லவரான இவர் சிட்டிக்கு போய் ட்ரைனிங் ஸ்கூல் ஆரம்பிக்கலாம்னு போறாரு.  அங்க போய் ஒரு பொண்ணுக்கும் அவ தப்பிக்கும் உதவி பண்ண போய் ஒரு Human Trafficking gang உடன் உரசல் ஏற்படுகிறது.  அப்பறம் என்ன தனி ஆளாக அந்த பொண்ணை காப்பாற்றுவது அதிரடியான மிச்ச படம்.  முதல் 30 நிமிஷம் படம் மெதுவா போகுது. அதுக்கு அப்புறம் ஃபுல்லா ஆக்சன் சீக்குவென்ஸ் தான்.  Raid படத்தை விட ஆக்சன் நடக்கும் இடங்கள் வெரைட்டி யாக உள்ளது. மொடட மாடி, லிஃப்ட் சண்டை என சிறப்பாக உள்ளது.  கண்டிப்பாக பாருங்கள். 

Close Encounters Of The Third Kind - 1977

Stephen Spielberg  ஆரம்ப காலத்தில் எடுத்த Sci Fi படம். இது தன்னுடைய கனவு படம் என்று சொல்லி இருக்கிறார்.  ஏலியன் பூமிக்கு வரும் கதை தான் . ஆனால் சொன்ன விதம் அருமை.  IMDb 7.6 #tamil dub ❌ Won 1 Oscar  படம் 3 கதாபாத்திரங்களை சுற்றி நகர்கிறது.  ஹீரோ தற்செயலாக UFO ஐ மிக அருகில் பார்த்து விட்டு அதனால் மூளை குழம்பியவாறு அலைகிறான். அவன் மனது ஒரு மலை போன்ற அமைப்பை சுற்றி சுற்றி வருகிறது.  இன்னொரு பெண்ணின் குழந்தை ஏலியன்களால் கடத்தப்படுகிறது. அந்த பெண்ணிற்கும் அந்த மலை போன்ற அமைப்பு தான் டார்கெட்.  இன்னொரு பக்கம் ப்ரெஞ்ச் விஞ்ஞானி அமெரிக்கர்களுடன் ரகசியமாக ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கிறார்.  அனைவரையும் இணைக்கிறது அந்த மலை போன்ற இடம்.  அது என்ன இடம் ? ஏலியன்களின் நோக்கம் என்ன ? நல்லவர்களாக ? கெட்டவர்களா ? அவர்களுடன் எப்படி மனித இனம் தொடர்பு கொண்டது என்பதை படத்தில் பாருங்கள்.  இந்த படத்தோட ஸ்பெஷல் என்னவென்றால் கடைசி வரைக்கும் ஏலியன்கள் நல்லதா கெட்டதா என்ற சஸ்பென்ஸ்ஸில் வைத்து இருந்தது. அருமையான Camera work.. ஆரம்பத்தில் நட்சத்திரங்களுடன் வீட்டை காட்டும் ஷாட்டுகள் எல்லாம் அருமை. Cinematography க்