Twin Tower தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட பிறகு பின்லாடனை எவ்வாறு அமெரிக்கா கண்டுபிடித்த கொன்றது என்பதை பற்றிய படம்.
பின்லாடனை எவ்வாறு தேடி கண்டு பிடித்தார்கள் மற்றும் அவனை கொல்ல நடந்த ஆபரேஷன் உடன் படம் முடிகிறது. குறிப்பாக ஒரு பெண் அதிகாரி எவ்வாறு இந்த தேடுதல் வேட்டையை நடத்தினார் என்பதை சொல்கிறது.
IMDb 7.4
Tamil dub ❌
படத்தின் முடிவு நம்ம அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் திரைக்கதை அருமையாக இருப்பதால் போரடிக்காமல் செல்கிறது.
பெரிய ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் கிடையாது. ஆனால் படம் நல்லா இருக்கும் கண்டிப்பாக பாருங்கள்.
பிரபல பெண் டைரக்டரான Kathryn Bigelow அருமையாக படத்தை இயக்கி உள்ளார்.
இவருடைய இன்னொரு படமான The Hurt locker (2008) க்காக சிறந்த இயக்குனருக்கான Oscar award வாங்கினார்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
Director: Kathryn Bigelow
Cast: Jessica Chastain, Jason Clarke, Kyle Chandler, Jennifer Ehle, Harold Perrineau, Mark Strong, Joel Edgerton, James Gandolfini
Screenplay: Mark Boal
Cinematography: Greig Fraser
Music: Alexandre Desplat
கருத்துகள்
கருத்துரையிடுக