2018 ல நியூஸ்ல மிகவும் பரபரப்பா வந்த ஒரு செய்தியை பற்றிய டாக்குமெண்டரி.
தாய்லாந்து மலைப்பகுதியில் ஒரு குகைக்குள் விளையாட போன ஒரு ஃபுட்பால் டீமை சேர்ந்த சிறுவர்கள் + Coach திடீர் மழை காரணமாக உள்ளே மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களை எப்படி மீட்டார்கள் என்பதை சொல்கிறது.
IMDb 8.4
Tamil dub ❌
Available @hotstar
அந்த குகைய பார்க்கவே பயமா இருக்கு. கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் மேல நீளமானது. பல கிளைகள் ,பாதைகள், சுரங்கங்கள் என பாக்க Maze மாதிரி இருக்கு. இதுல பசங்க உயிரோட இருக்காங்களா ? இறந்து விட்டார்களா என ஒரு சின்ன க்ளு கூட இல்லை.
இந்நிலையில் Thai Navy Seals வந்து உள்ள நுழைய பாக்குறாங்க கொஞ்சம் தூரம் கூட அவங்களால போக முடியவில்லை .
அதுக்கு அப்புறம் நியூஸ் பார்த்துட்டு Cave Divers எனப்படும் பொழுதுபோக்கிற்காக குகைக்குள் நீச்சல் அடிக்கும் தன்னார்வலர்கள் 4 பேர் UK ல இருந்து வர்றாங்க.
இதற்கு நடுவில் தாய்லாந்து Navy, US military , உலகம் முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் என எல்லாரும் வந்து குவிகிறார்கள்.
எவ்வளவு பேர் வந்தாலும் அந்த 4 பேருக்கு தான் அந்த குறுகிய இருண்ட குகைக்குள் போக Skills இருக்கு.
எப்படி ப்ளான் பண்ணி உள்ள போனாங்க ? அந்த 13 பேரையும் உயிரோடு மீட்டார்களா என்பது திரில்லர் படத்தையும் மிஞ்சும் 1.45 மணி நேர டாக்குமெண்டரி.
18 நாட்கள் 5000 பேருக்கு மேல் இந்த ஆப்ரேஷனில் பங்கு பெற்று உள்ளனர். கடைசியில் கண்டிப்பாக அழுக வைச்சுருவாங்க.
12 நாளுக்கு அப்புறம் தான் பசங்க உயிரோட இருக்காங்க என்று கண்டுபிடிப்பார்கள். அந்த டைம்ல எடுத்த வீடியோ அவ்வளவு அழகா இருக்கும்.
அந்த பசங்க கடைசி வரைக்கும் பயமே இல்லாமல் சிரிச்சுகிட்டே இருப்பாங்க. என்ன ஒரு மன தைரியம் மற்றும் நம்பிக்கை .
என்னை பொறுத்தவரை அந்த நாலு பேரும் Super Hero க்கள் தான்.
கண்டிப்பாக பாருங்கள்.
Highly Recommended 🔥🔥🔥🔥🔥
கருத்துகள்
கருத்துரையிடுக