The Ice Age Adventures Of Buck Wild Tamil Review
Dawn of the dinosaurs பாகம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் Buck கேரக்டர்.
Tamil dub ❌
Available @DisneyPlusHS
என்ன பண்ண போகுதுனு யாரும் கண்டு பிடிக்க முடியாது. அது முக்கிய பாத்திரத்தில் நடிச்சு வந்துள்ள படம்.
ஆனால் இந்த படத்துல முக்கியமான கேரக்டர் இரண்டு Possums தான்.
எப்பவுமே விளையாட்டாக இருக்கும் Crash & Eddie ஒரு வேகத்தில் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள் எதிர்பாராத விதமாக பாதாள உலகிற்கு வந்து Buck உடன் இணைகிறார்கள்.
அந்த நேரத்தில் ஒரு அறிவாளி வில்லன் டைனோசர் பாதாள உலகத்தை மற்ற டைனோசர்கள் உதவியுடன் தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறது. இதை இந்த கூட்டணி எப்படி முறியடித்து என்பது தான் படம்.
Buck, Eddie, Crash என மூன்று கதாபாத்திரங்களை சுற்றி நகர்கிறது படம். ரொம்ப gripping என்று சொல்ல முடியாது.
திடீரென Crash & Eddie கிளம்புவது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது போன்று ஒரு ஃபீலிங். மற்றபடி ஆங்காங்கே காமெடி டயலாக்ஸ் மற்றும் ஆக்சன் இருக்கு.
படம் ரொம்ப சிறப்பாக இல்லை என்றாலும் Ice Age ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். மற்றவர்கள் குழந்தைகளுக்காக அவர்களுடன் சேர்ந்து பார்க்கலாம். .
#BuckWild #adventure
கருத்துகள்
கருத்துரையிடுக