முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Google Photos Tips - ஆண்ட்ராய்டில் Cloud Sync செய்வது எப்படி ?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பர் ஒருவர் Phone / Memory card ல் உள்ள போட்டோஸ் எப்படி Cloud ல் Sync பண்ணணும்னு கேட்டார். நிறைய பேருக்கு இது தெரிஞ்சு இருக்கும் தெரியாதவங்க தெரிந்து கொண்டு யூஸ் பண்ணிக்கோங்க. 

Maximum நீங்க முதல் முறை ஃபோன் உபயோகிக்கும் போது Sync பண்ணவானு கேட்கும்.

எதுக்கு Sync பண்ணணும் ? 

1. ஃபோன் லாக் ஆகலாம் 

2. தொலைந்து போகலாம்

3. லாக் காம்பினேஷன் மறந்து போகலாம். 

4. ரிப்பேர் ஆகலாம் 

5. Memory Card corrupt ஆகலாம். 


இந்த மாதிரி நிலைமைல உங்க போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் எல்லாம் போயிடும். இல்ல நீங்க செலவு பண்ணி ஏதாச்சும் சர்வீஸ் சென்டர்ல கொடுக்கனும். அதுவும் 100% கிடைக்கும் என கேரண்டி கிடையாது. 


Google Cloud Sync : 

நம்ம Google Email I'd கூட 15 GB இலவச Cloud space வருது. 


நீங்க சிம்பிளா Back Up ON பண்ணீங்க என்றால் இப்ப வர்ற WhatsApp Forward message க்கு ஒரு வாரத்துல 15 GB காலி ஆகிடும். 


அதனால் ஏதாவது ஒரு Folder ஐ Sync பண்ணுவது நலம். நீங்கள் எத்தனை Folder வேணும்னாலும் பண்ணிக்கலாம். 


உதாரணமாக Camera Folder எப்படியும் எல்லா மொபைல்லயும் இருக்கும். அத எப்படி Sync பண்றதுன்னு பார்க்கலாம். 


1. Google Photos Open பண்ணுங்க ‌2.  கீழ லைப்ரரி ஆப்ஷன் க்ளிக் பண்ணுங்க. 3. Open Camera Folder 

4. Backup & Sync ஆப்ஷன் ON பண்ணுங்க. 

use


5. ஒரு பாப் அப் வரும் அதுலயும் போய் Backup On பண்ணுங்க. 

6. அதல எந்த அக்கௌன்ட்ல மற்றும் Quality எல்லாம் கேட்கும் உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள். 

7. அவ்வளவு தான் முடிஞ்சது.


இனிமே நீங்க Photos & Videos உங்க கேமரால எடுத்தா Sync ஆகிரும். 


ஒரு கட்டத்தில் 15 GB காலி ஆகிவிட்டால் இன்னொரு Google account உருவாக்கி Photos களை Sync செய்ய அந்த account ஐ உபயோகித்து கொள்ளலாம். 


Advantages: 

1. உங்க. Photos & Videos எப்பனாலும் access பண்ணிக்கலாம்.

2. Mobile - ல ஏதாச்சும் Space வேணும்னா Delete பண்ணிக்கலாம்.

3. Mobile மாத்துனீங்கனா same Gmail I'd போட்டு Login பண்றப்ப எல்லாமே Sync ஆகிரும்.   . 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க