Duel - 1971
ஒரு கிளாசிக் த்ரில்லர் from Spielberg .
ஒரு சாதாரண பிஸினஸ் மேன் ரோட்ல போறப்ப ஒரு ராட்சச ட்ரக்க முந்திட்டு போறாரு.
அந்த ட்ரக் ட்ரைவர் பெரிய சைக்கோவா இருப்பான் போல ஹீரோவ விரட்டி கொல்ல வர்றான். இந்த சேஸிங் தான் படம்.
IMDb 7.1
Tamil dub ❌
படத்துல 2 பேர் தான் ஹீரோ & வில்லன்.அதுலயும் வில்லன் மூஞ்சிய காட்டவே மாட்டாங்க.
இவர்களை விட முக்கியமான கதாபாத்திரங்கள் அந்த ராட்சச ட்ரக் மற்றும் அந்த Plymouth Car
அந்த ட்ரக் பார்க்கும் போதே நமக்கு பீதியா இருக்கும். அதுவும் அந்த ஹாரன் சத்தம் மற்றும் கேமரா ஆங்கிள் எல்லாம் சிறப்பு
1.30 மணி நேரத்திற்கு மேல 2 வண்டிய + ஒரு மனுஷன மட்டும் வச்சுகிட்டு Gripping'a படம் எடுக்குறது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை.
பட லொக்கேஷன்கள் மற்றும் கேமரா பக்கா.
கண்டிப்பாக பாருங்கள் 👍👍
இந்த படத்தை பற்றி டாக்குமெண்டரியில் சொல்லப்பட்ட விஷயங்கள்.
Film Critic :
"No one moves camera like Spielberg "
உண்மை தான் படத்த பாக்குறப்ப நமக்கே தெரியும். கேமரா நகரும் விதம் அவ்வளவு அருமையா இருக்கும்.
Spoiler Below :
Spielberg : " கடைசில அந்த ட்ரக் வெடிக்க வைக்கல என்பதால்
தயாரிப்பாளர்கள் ரொம்பவே அதிருப்தியில் இருந்தார்கள். மறுபடியும் Shoot போக சொன்னாங்க.
ஆனா நான் கண்டிப்பா முடியாது என்று சொல்லிட்டேன்.
அந்த ட்ரக் சாகுறத மெதுவா காட்டுனா தான் படம் பாக்குறவங்களுக்கு ஒரு impact இருக்கும். "
கண்டிப்பா நமக்கு படம் பாக்குறப்ப எந்தளவு உண்மை எனறு
உணர முடிந்தது.
Spielberg : "என்னோட படங்களில் பெரும்பாலும் ஒரு சாதாரண மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் பொங்கி எழுவான். இந்த படம் என்னோட கதை தான். ஸ்கூல்ல என்ன எப்பவுமே பெரிய பசங்க ரொம்ப Bully பண்ணுவாங்க.
அந்த கார் தான் நானு, கிண்டல் பண்ற பசங்க தான் அந்த ட்ரக்"
இதெல்லாம் டாக்குமெண்டரில பார்த்துட்டு தான் ஆர்வமாகி படத்த பார்த்தேன் .
வொர்த்து 👍👍
David, a businessman, passes by an old tanker truck in a dessert while travelling for a meeting. The driver of the truck is a psychopath who finds David's overtaking offensive and decides to kill him.
Director: Steven Spielberg
Starring: Dennis Weaver
கருத்துகள்
கருத்துரையிடுக