A Clockwork Orange - Tamil Review
IMDb 8.3 ( #114 out of top 250 movies)
Tamil Dub ❌
OTT ❌
எதிர்காலத்தில் நடக்கும் கதை.ஒரு வன்முறை குணம் கொண்ட இளைஞனின் கதை தான் இது.
ஹீரோ தனக்குனு ஒரு குரூப் வச்சுக்கிட்டு ஏதாச்சும் ஒரு வீட்டுக்கு போய் கொடூரமா கற்பழிப்புனு , கொலை , திருட்டுனு சுத்துறானுக. அவனுக்கு பிடிச்சது மூணு Sex, Violence & Beethoven music.
குரூப்புக்குள் ஏறபட்ட சண்டை மட்டும் உள்குத்து வேலையால் ஹீரோ மட்டும் 14 வருட தண்டனை பெற்று சிறை செல்கிறான்.
கவர்மெண்ட் குற்றங்களை குறைக்க ஒரு புது ஆராய்ச்சி பண்ணுது .சீக்கிரமா ரிலீஸ் ஆகலாம் என ஐடியா பண்ணி தானே முன்வந்து அந்த சோதனைக்கு சம்மதிக்கிறான்.
அது என்னமாதிரியான சோதனை மற்றும் சோதனை வெற்றிகரமாக முடிந்து வெளியே வந்த பின் அவன் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் மீதமுள்ள படம்.
முதலில் இந்த படம் 1971 ல் வநதது என நம்ப முடியாது. செட்டிங்ஸ் எல்லாம் அவ்வளவு மாடர்னாக இருந்த்து.
ஹீரோ அலெக்ஸ் தான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரம் படம் முழுவதும் அவன் தான். Malcolm McDowell பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
இதை ஒரு அரசியல் நையாண்டி படமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அப்படியே இந்த படத்தை இப்ப எடுத்தாலும் பர்ப்பெக்ட்டா ஃபிட் ஆகும்.
படம் கிட்டத்தட்ட 2.15 மணிநேரம் ஓடுகிறது. ஆனால் படம் எந்த இடத்திலும் போரடிக்கவில்லை.
கண்டிப்பாக பாருங்கள்.
வன்முறை மற்றும் Nudity ரொம்பவே அதிகம்.
Highly Recommended 🔥🔥🔥🔥🔥
Watch Trailer:
A Clockwork Orange (1971)
In the future, a sadistic gang leader is imprisoned and volunteers for a conduct-aversion experiment, but it doesn't go as planned.
https://www.imdb.com/title/tt0066921/plotsummary?item=po3476388
Director: Stanley Kubrick
Cast: Malcolm McDowell, Patrick Magee, Warren Clarke, James Marcus, Aubrey Morris, Godfrey Quigley, Michael Bates
Screenplay: Stanley Kubrick based on the novel by Anthony Burgess
Cinematography: John Alcott
Music: Walter Carlos
கருத்துகள்
கருத்துரையிடுக