Netflix ல ரேண்டம்ல வந்த Brazilian படம்.
கிராமத்தில் வசிக்கும் 4 இளைஞர்கள் வறுமையில் வாடும் குடும்பத்தை காப்பாற்ற தெரிந்தவர் ஒருவர் ஏற்பாட்டில் நகரத்திற்கு வருகிறார்கள்.
ஆனால் வந்த பின் தான் தெரிகிறது கொத்தடிமையாக விற்கப்பட்டு உள்ளார்கள் என்று தெரிகிறது.
இந்த நால்வரில் ஹீரோ மட்டுமே படித்தவன் மற்றும் புத்திசாலி. தப்பிக்க வழியே இல்லாத நிலையில் உயிர் வாழ மற்றும் குடும்பத்தை பாதுக்காக்க அவன் செய்யும் முயற்சிகள் தான் படம்.
ஹீரோவின் இந்த முயற்சியில் அவன் சந்திக்கும் சவால்கள் மற்றும் தன் விருப்பத்திற்கு மாறாக எடுக்கும் முடிவுகள் மற்றும் அதன் விளைவுகளை பற்றி சொல்கிறது படம்.
ஹீரோவின் நடிப்பு ரொம்பவே இயல்பாக இருந்தது.
இந்தக்காலத்தில் நடக்கும் கொத்தடிமை முறையை பற்றிய படம். மெதுவாக நகரும் படம் இது. ஆனால் நல்லா தான் இருந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக